www.garudabazaar.com

LATEST UPDATE: பாகுபலி பிரபாஸின் புதுப்படம் எப்போ ரிலீஸ் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் 'சாஹோ' படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றது.

bahubali prabhas new film release date announced

அதனால் பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அறிவுரைப்படி காதலை மையமாக வைத்து ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் 'ராதே ஷியாம்' படத்தில் நடிக்கிறார். இந்த படம் 1970களில் ஐரோப்பாவில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேவின் நடிப்பில் உருவாகி வரும் 'ராதே ஷியாம்' படத்தின் புதிய வெளியீட்டு தேதியை யு.வி. கிரியேஷன்ஸ், படத்தயாரிப்பு நிறுவனம் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.

bahubali prabhas new film release date announced

அதன் படி, 'ராதே ஷியாம்' ஜனவரி 14, 2022 அன்று திரையரங்குகளில், மஹாசங்கராந்தி நாளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேயின் 'ராதே ஷ்யாம்' உலகம் முழுவதும் ஜீலை 30, 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவிருந்தது. கொரோனா வைரஸ் தொற்று  இரண்டாவது அலை காரணமாக, படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

bahubali prabhas new film release date announced

People looking for online information on Pooja Hegde, Prabhas will find this news story useful.