www.garudabazaar.com

"டாக்டர்ஸ் வந்து பேசுவாங்க".. பிக்பாஸ் வீட்டுக்குள்ள கவுன்சிலிங் பெற்ற ஆயிஷா.‌. Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

Ayesha Talked About Her Experience in BIGGBOSS

இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்தும் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. அது மட்டுமில்லாமல், இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்து பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது

பொம்மை டாஸ்க், அரசவை, அருங்காட்சியகம் டாஸ்க், கோர்ட் டாஸ்க், ஏலியன் பழங்குடியினர் டாஸ்க், நடிகர்கள் டாஸ்க் என அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படுத்தி இருந்தது.

Ayesha Talked About Her Experience in BIGGBOSS

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள்  பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் சனிக்கிழமை ராம் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமை ஆயிஷா வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

Ayesha Talked About Her Experience in BIGGBOSS

பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன பிறகு ஆயிஷா நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அசீம், விக்ரமன், கமல்ஹாசன் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

அதில், “ஒவ்வொரு முறையும் நான் down ஆகும்போது பிக்பாஸ் வீட்டின் உள்ளே கவுன்சிலிங் கொடுப்பார்கள். ‘உங்கள் குடும்பம் எவ்வளவு கஷ்டப்படும்னு தெரியுமா’ என டாக்டர்கள் கேட்கும் போது.. நமது குடும்பத்தை கஷ்டப்படுத்த கூடாது என நினைத்து உத்வேகத்துடன் திரும்ப வருவேன்”. என ஆயிஷா கூறினார்.

மேலும்,  “உள்ள உங்களுக்கு கவுன்சிலிங் நடந்ததா..?” என்ற நெறியாளரின் கேள்விக்கு,  “டாக்டர்ஸ் வந்து பேசுவாங்க” என ஆயிஷா பதில் அளித்துள்ளார்.

"டாக்டர்ஸ் வந்து பேசுவாங்க".. பிக்பாஸ் வீட்டுக்குள்ள கவுன்சிலிங் பெற்ற ஆயிஷா.‌. EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ayesha Talked About Her Experience in BIGGBOSS

People looking for online information on Ayesha, Biggboss, Kamal Haasan, Ram will find this news story useful.