www.garudabazaar.com

Jeremy Renner : ‘அவெஞ்சர்ஸ்’ நடிகருக்கு என்ன ஆச்சு? உடல்நிலை கவலைக்கிடமா..? - கதறும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மார்வெல் திரைப்படங்களில் ‘ஹாக் ஐ’ சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஹாலிவுட் நடிகர் ஜெரமி ரெனர்.

avengers Jeremy Renner in critical but stable reportedly

Also Read | "வானம் கூட எல்லை இல்லை".. மகள் பிறந்தாளுக்கு நடிகை மீனா நெகிழ்ச்சியான பதிவு!

உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை இவர், அவெஞ்சர்ஸ் மற்றும் கேப்டன் அமெரிக்கா படங்களில் நடித்ததற்காக பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த நடிகர் ஜெரமி ரெனரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படும் தகவல்கள் பலவும் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது.

அதன்படி, தமது வீட்டிற்கு முன் குவிந்திருந்த பனியை சுத்தம் செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது எதிர்பாராத நிலையில உண்டான விபத்தால் அவர் அதில் சிக்கி காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் ஜெரமி ரெனர், தற்போது, மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறப்பட்டு வந்த நிலையில், விரைவில் அவர் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருவதாக இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாக ஜெர்மி  விபத்து ஏற்பட்டதும், பின்னர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவரது குடும்பத்தினர் அவருடன் மருத்துவமனையில் இருப்பதாகவும், அவரது செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார்.  ஏற்கனவே வெளியான ‘தி ஹர்ட் லாக்கர்’, 2011-ல் வெளியான ‘தி டவுன்’ ஆகிய படங்களில் நடித்த ஜெரமி ரெனர் ஆஸ்கார் விருதுக்கு இரண்டு முறை  பரிந்துரைக்கப்பட்டுள்ளாஅர்.

இதனிடைடே ஜெர்மியின் ‘மேயர் ஆஃப் கிங்ஸ்டவுன்’ 2வது சீசன், வரும் ஜனவரி 15 அன்று பாரமவுண்ட்+ ல் திரையிடப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read | "இங்லீஷ்லயே பேசுறேனா? No No Unfortunately".. கதிரை வெச்சு செஞ்ச ADK, அசீம்! கமல் கொடுத்த சான்ஸ்..

தொடர்புடைய இணைப்புகள்

avengers Jeremy Renner in critical but stable reportedly

People looking for online information on Avengers, Jeremy Renner will find this news story useful.