www.garudabazaar.com

அதர்வாவின் அடுத்த படம்.. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் & டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2010ஆம் ஆண்டு பாணா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் அதர்வா முரளி.

Atharvaa starring Address First Look and teaser AR Murugadoss

மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா,  பாணா காத்தாடி திரைப்படத்தை தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், சண்டிவீரன், ஈட்டி, கணிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.

Atharvaa starring Address First Look and teaser AR Murugadoss

பின்னர் அவருக்கு, பாலா இயக்கத்திலான பரதேசி திரைப்படமும், நயன்தாராவுடன் இணைந்து நடித்த இமைக்காநொடிகள் திரைப்படமும் முக்கியமான படங்களாக அமைந்தன. கடைசியாக அதர்வா நடிப்பில் செம போதை ஆகாதே, பூமராங், 100 உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.

Atharvaa starring Address First Look and teaser AR Murugadoss

அதன் பின்னர் தள்ளிப்போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்தை, ருக்குமணி வண்டி வருது உள்ளிட்ட திரைப்படங்களில் அதர்வா நடித்து இருக்கிறார். இந்த திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. இந்த நிலையில் அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் மற்றுமொரு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டீசரையும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தம் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

அட்ரஸ் என்று பெயரிடப்பட்டு இருக்கிற இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜமோகன் இயக்குகிறார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இந்த திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். காக்டைல் சினிமாஸ் மற்றும் எஸ்.எஸ்.மீடியா இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் உண்மைச் சம்பவங்கள அடிப்படையாகக் கொண்டது என்று இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ALSO READ: தளபதியை இயக்கினால், அவரது Role இதுதான்! - ரசிகரின் கேள்விக்கு மிஷ்கினின் மிரட்டலான பதில்!

Atharvaa starring Address First Look and teaser AR Murugadoss

People looking for online information on AddressFirstLook, AddressTeaser, Atharvaa, Atharvaa Murali will find this news story useful.