Reliable Software
www.garudabazaar.com

"ஒரு ரூபா கூட நான் வீட்டுக்குன்னு.." Behindwoods டிஜிட்டல் விருது மேடையில் எமோஷனலான அஸ்வின்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரு கலைஞனுக்கு விருதுகள் தரும் மகிழ்ச்சி அளப்பரியது. மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் சிந்தும் வியர்வைக்கும், உழைப்புக்கும், முயற்சிக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் பொழுது அதில் கிடைக்கும் பூரிப்பும் சொல்லி முடியாது. அந்த வகையில் குக் வித் கோமாளி அஷ்வினுக்கு ரசிகர்கள் ஏராளம். பொது இடங்களுக்கு செல்லும் பொழுது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொள்வதை பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு அஸ்வினுக்கு அந்நிகழ்ச்சி தற்போது மிகப்பெரிய பிரேக்கிங் அமைந்துள்ளது. ஆனால் இதற்கு முன்பு பல கடினமான சூழல்களை அவர் கடந்து வந்துள்ளார் என்பது அவர் பேசும் போது தான் தெரிகிறது. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக Most Popular Person of Reality Television - Male  என்ற Behindwoods Gold Icon விருதினை அவர் பெற்றுள்ளார்.

Ashwin emotional at behindwoods gold icon விருது மேடையில் எமோஷனலான அஸ்வின்

அவர் கூறும் பொழுது "நான் பல அடிகளை பெற்றுள்ளேன் ஆனால் முகம் தெரியாத பலர் எனக்கு உதவி செய்துள்ளனர். எனது பெற்றோருக்கு மிகவும் நன்றி. எனது வயது இருக்கும்நண்பர்கள் நிறைய சம்பாதிக்கும் போது சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்பதற்காக எனது முயற்சிகள் ஒவ்வொன்றுக்கும் அவர்கள் உறுதுணையாக நின்றனர். இன்னும் நான் ஒரு ரூபாய் கூட எனது வீட்டின் செலவிற்கு என்று கொடுத்தது இல்லை. ஆனாலும் என்னை நம்பி அவர்கள் எனக்கு உறுதுணையாக நிற்பதற்காக நன்றி என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அதன்பிறகு அஸ்வினுக்கு ஒரு எமோஷனல் சீனை நடித்துக் காட்ட வேண்டும் என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதற்கு காதல் தோல்வியில் காதல் தோல்வியில் இருக்கும் ஒரு ஹீரோ அழுது பேசும் காட்சியை தத்ரூபமாக நடித்துக் காட்டி ரசிகர்களுக்கு புல்லரிப்பை ஏற்படுத்தினார். அப்பொழுது தன்னை அறியாமலேயே அழுது கதறிய அஸ்வினை, புகழ் தேற்றும்அந்த நெகிழ்ச்சியான தருணங்கள் இதோ..!

"ஒரு ரூபா கூட நான் வீட்டுக்குன்னு.." BEHINDWOODS டிஜிட்டல் விருது மேடையில் எமோஷனலான அஸ்வின்...! வீடியோ

Tags : Ashwin

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ashwin emotional at behindwoods gold icon விருது மேடையில் எமோஷனலான அஸ்வின்

People looking for online information on Ashwin will find this news story useful.