Reliable Software
www.garudabazaar.com

பிகில் பட இளம் நடிகையுடன் கைகோர்க்கும் குக் வித் கோமாளி அஸ்வின்!.. பட்டையை கிளப்பும் போஸ்டர்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு  ரசிகர்கள் அதிகம். விஜய் டிவி என்றாலே கொண்டாட்டங்கள் நிறைந்த ரியாலிட்டி ஷோ யாவும் பிரபலமாக மக்களிடையே வெற்றி அடைந்து வரும் நிலையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் பலரிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Cook With Comali Ashwin Kutty Pattas Music Video FL

இந்த நிகழ்ச்சியில் தற்போது அஸ்வின், சிவாங்கி, புகழ், பாபா பாஸ்கர், பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பட்டையை கிளப்பி வருகின்றனர். குறிப்பாக அஸ்வின், சிவாங்கி இருவரின் காம்பினேஷனில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடக்கும் க்யூட் ரகளைகளை காண்பதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். 

நிறைய குறும்படங்கள் மட்டுமல்லாமல் சில படங்களிலும் தலை காட்டி வந்த அஸ்வின் அண்மையில் Behindwoods Golden Icons - டிஜிட்டல் மற்றும் டெலிவிஷன் விருது நிகழ்வில் குக் வித் கோமாளி ரியாலிட்டி நிகழ்ச்சிக்காக, மோஸ்ட் பாப்புலர் நடிகருக்கான விருது பெற்றார்.

இந்நிலையில் தற்போது பிகில் திரைப்படத்தில் நடித்த Reba Monica John-உடன் இணைந்து குட்டி பட்டாஸ் (Kutty Pattas) என்கிற மியூசிக்கல் வீடியோ ஆல்பத்தில் அஸ்வின் நடிக்கிறார். இதன் போஸ்டர் தற்போது வெளியாகி ட்ரெண்ட் ஆகிவருகிறது. அ.ப. ராஜா எழுதியிருக்கு இந்த பாடலை, சோனி மியூசிக் வெளியிடுகிறது.

இந்த பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். வெங்கி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த மியூசிக்கல் வீடியோ உருவாகிறது. இந்த மியூசிக்கல் வீடியோ ஆல்பத்துக்காக அவரது ரசிகர்களும் ரசிகைகளும் இப்போதிருந்தே வெறித்தனமாக வெய்ட் பண்ணுகின்றனர்.

ALSO READ: அஜித் சாரின் விஸ்வாசம் படத்துக்காக தேசிய விருது.. விஜய் அண்ணனோட தமிழன் படத்தில தொடங்கிய பயணம்.. இமான் நெகிழ்ச்சி.. இதுதான் காரணம்!

தொடர்புடைய இணைப்புகள்

Cook With Comali Ashwin Kutty Pattas Music Video FL

People looking for online information on Ashwin, Bigil, Bigil Tamil, CookWithComali, Reba Monica John, Trending will find this news story useful.