சயீஷாவின் கல்யாண நாள் ட்வீட்டுக்கு ஆர்யா ஜாலி பதில் - ''அது ரொம்ப Long டைம்...''
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் ஆர்யா - சாயீஷா இணைந்து நடித்துள்ள 'டெடி' படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை 'மிருதன்', 'டிக் டிக் டிக்' பட இயக்குநர் சக்தி சௌந்தரராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகை சயீஷா தனது திருமண நாள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், ''நீ இல்லாத வாழ்வு நினைத்து பார்க்க முடியாதது ஜான். ஒரே நேரத்தில் காதல், எதிர்பார்ப்பு என அனைத்து உணர்வும் இருக்கிறது. இப்பொழுதும் எப்பொழுதும் உன்னை நேசிக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள ஆர்யா,'' எப்பொழுதும் என்பது நீண்ட காலம். ஆனால் உன்னுடன் செலவிடும் போது அது பெருசாக தெரியாது. உன்னால் தான் நான் நானாக இருக்கிறேன். நன்றி'' என்று வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
டெடி படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்க, டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு எஸ் யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
Forever is a long time but I don’t mind spending it with you 😉😉🤗🤗😍😘😘🤩🤩 I am more of me because of you .. love u so much my jaan 🤗🤗😘 thanks for being you .. Happy Anniversary 🤗🤗😘😘 https://t.co/Je0LkI5f4k
— Arya (@arya_offl) March 10, 2020