www.garudabazaar.com

அருண் விஜய் மிரட்டும் 'பார்டர்'... கிளைமாக்ஸுக்காக அந்த இடத்திற்கு பறக்கும் குழுவினர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். அஜித்துக்கு வில்லனாக இவர் நடித்த என்னை அறிந்தால், இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் இவர் நடித்த தடம் படமும் ஹிட் அடித்தது. இவரது நடிப்பில் தற்போது பாக்ஸர் திரைப்படம் தயாராகவுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இயக்குநர் அறிவழகன் இயக்கும் 'பார்டர்' திரைப்படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். ரெஜினா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் தாயாரிக்கின்றனர்.

arun vijay next border film climax update அருண் விஜய் மிரட்டும் 'பார்டர்'

தற்போது படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு வரும் டிசம்பர் 7 முதல் துவங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நொய்டாவில் படமாக்கப்பட இருக்கிறதாம். இத்துடன் இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக மொத்த டீமும் நொய்டாவுக்கு பறக்க உள்ளனர். கொரோனா தடைகளுக்கு மத்தியிலும் இந்த படத்தை பட குழுவினர் வெற்றிகரமாக முடிக்க உள்ளனர். இந்நிலையில் கூடிய சீக்கிரமே அருண் விஜய்யிடம் இருந்து ஒரு அதிரடியான மிரட்டலை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.

Tags : Arun Vijay

தொடர்புடைய இணைப்புகள்

arun vijay next border film climax update அருண் விஜய் மிரட்டும் 'பார்டர்'

People looking for online information on Arun Vijay will find this news story useful.