o2

அருள்நிதி நடிக்கும் ‘D ப்ளாக்’… டிஜிட்டல் & ஓவர்சீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருள்நிதியின் அடுத்த ரிலீஸாக டி ப்ளாக் திரைப்படம் ஜுலை 1 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

Arulnithi D Block movie digital overasead rights update

Also Read | உலகின் அழகான முகம் கொண்ட பெண்ணாக ’ஆம்பர் ஹெர்ட்’… ஆய்வு முடிவை வெளியிட்ட மருத்துவர்

அருள்நிதி

அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் படமான D ப்ளாக் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. வரும் ஜூலை 1 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. இந்த படத்தை விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். திரில்லர் படமாக டி ப்ளாக் திரைப்படம் உருவாகி வருகிறது.

Arulnithi D Block movie digital overasead rights update

இந்த படம் பற்றி பேசிய தயாரிப்பாளர் B.சக்திவேலன் , “நடிகர் அருள்நிதி மிக வித்தியாசமான களங்களில், ரசிகர்கள் ரசிக்கும்படியான படங்களையும், குடும்பத்தினர் கொண்டாடும் படங்களையும், தொடர்ச்சியாக தந்துவருகிறார். அவரது சமீபத்திய படமான "களத்தில் சந்திப்போம்" திரைப்படத்தின் வெற்றி, திரைத்துறையில் அவரது மதிப்பை உயர்த்தியிருக்கிறது. ஒரு நண்பரின் மூலமாக அவரது இந்த திரைப்படத்தின் இறுதி பதிப்பை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் முடியும் வரையிலும் படம் எவ்வாறு செல்லும் என்பதை கணிக்கமுடியாதபடி, பல ஆச்சர்யஙகளை தந்தது இந்த திரைப்படம். அனைத்து வகையான ரசிகர்களும் கொண்டாடும் அம்சங்கள் படத்தில் நிரம்பியிருந்தது. படம் முடிந்த கணத்திலேயே படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்று விட வேண்டும் என்கிற வேட்கை என்னுள் உண்டானது.” எனக் கூறியிருந்தார்.

Arulnithi D Block movie digital overasead rights update

டிஜிட்டல் & ஓவர்சீஸ் உரிமை…

இந்நிலையில் தற்போது படம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் டிஜிட்டல் மற்றும் வெளிநாட்டு உரிமைகளை முன்னணி நிறுவனமான ’ap internationals’ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.  அருள்நிதி நடிப்பில் அடுத்தடுத்து தேஜாவு மற்றும் டைரி ஆகிய திரைப்படங்கள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வெளியாக உள்ளது. இரண்டு மாதங்களில் அருள்நிதியின் மூன்று திரைப்படங்கள் ரிலீஸாக இருப்பது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Also Read | சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து ‘பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சியில் பிரபல நடிகர்… Netflix வெளியிட்ட Update

Arulnithi D Block movie digital overasead rights update

People looking for online information on Arulnithi, Arulnithi D Block movie, அருள்நிதி, D ப்ளாக், D Block movie updates will find this news story useful.