777 Charlie Trailer

அருள்நிதியின் புதிய படம் 'தேஜாவு'.. பிறந்த நாளில் ரிலீஸ்.. வெளியான அசத்தல் அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அருள்நிதி தமிழ் சினிமாவில் கவனித்தக்க பல்வேறு திரைப்படங்களில் நடித்து, தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.

Arulnithi starrer Dejavu movie release date is here

கதைத் தேர்வு, கதாபாத்திர வடிவமைப்பு என, தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் வெரைட்டி காட்டுபவர் அருள்நிதி. அதுமட்டுமில்லாமல் அவர் நடிக்கும் திரைப்படங்களில் அவரது கேரக்டரும் சரி, கதையும் சரி இண்டென்சிவான ப்ளேவுடன் இருப்பதையும் காண முடிவதாய் ரசிகர்கள் கூறுவதுண்டு.

இந்நிலையில் அருள்நிதி நடித்துள்ள புதிய திரைப்படங்களின் ரிலீஸ் தொடர்பான பல்வேறு அப்டேட்டுகளை வரிசையாக காண முடிந்தது. அந்த வகையில் , தற்போது அருள்நிதி நடித்துள்ள தேஜாவு திரைப்படத்தின் ரிலீஸ் தொடர்பான அப்டேட் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

அதன்படி, வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி, ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் படக்குழுவினர் வெளியீட்டிற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இத்திரைப்படம் வெளியாவது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதுவும் இந்த ரிலீஸ் தேதியானது நடிகர் அருள்நிதியின் ரசிகர்களுக்கும் உற்சாகமூட்டக் கூடியதாக அமையவிருக்கிறது. ஆம், தேஜாவு திரைப்படமானது, இந்த படத்தின் நாயகனான அருள்நிதியின் பிறந்த நாளான ஜுலை 21-ம் தேதி வெளியிடப் படவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Arulnithi starrer Dejavu movie release date is here

இந்த படத்திற்கு பிரபல முன்னணி இசையமைப்பாளர்களின் ஒருவரான ஜிப்ரான் இசையமைக்க, PG முத்தையா ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இந்த படத்துக்கு படத்தொகுப்பாளராக அருள் E சித்தார்த் பணியாற்றியுள்ளார். இந்த படத்துக்கு சண்டை பயிற்சியாளராக பிரதீப் தினேஷும் கலை இயக்குனராக வினோத் ரவீந்திரனும் பணியாற்றியுள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Arulnithi starrer Dejavu movie release date is here

People looking for online information on Arulnithi, அருள்நிதி, தேஜாவு, Dejav, Dejavu movie, Latest tamil cinema news, Tamil latest news will find this news story useful.