RRR Others USA
www.garudabazaar.com

அடடே.. Beast ஷாப்பிங் மால் Set-க்கு பின்னாடி இவ்ளோ இருக்கா… கலை இயக்குனர் Exclusive பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வைரல் ஹிட்டாகியுள்ளது.

Art director reveals Stories behind beast set

துடித்தெழு தோழா".. ஜிப்ரான் இசையில் இன்ஸ்பிரேஷனான டாணாக்காரன் பட லிரிக் வீடியோ!

பீஸ்ட் கூட்டணி…

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த நெல்சனும் மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய்யும் இணைந்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாகிறது.  இந்த படத்தில்  பூஜா ஹெக்டே, யோகி பாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே,  செல்வராகவன், விடிவி கணேஷ் மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய்யின் சமீபகால படங்களின் வெற்றியால் பீஸ்ட் படத்தின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.

Art director reveals Stories behind beast set

பீஸ்ட் டிரைலர்….

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி  பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்த டிரைலரில் வரும் ஆக்ஷன் காட்சிகள், விஜய் பேசும் வசனங்கள் ஆகியவை, விஜய் ரசிகர்களுகு goosebump தருணங்களாக அமைந்துள்ளன. தீவிரவாதிகளால் சென்னையில் உள்ள ஒரு முக்கியமான ஷாப்பிங் மால் ஹைஜாக் செய்யப்படுகிறது. அதில் எதிர்பாராத விதமாக ராணுவ உளவாளியான வீரராகவன் (விஜய்) மாட்டிக் கொள்கிறார். அவர் எப்படி அங்கிருந்து தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிடுகிறார் என்று காட்டப்படுகிறது. அதுபோலவே ராணுவ வீரரான விஜய்யின் மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

Art director reveals Stories behind beast set

கவனத்தை ஈர்த்த ஷாப்பிங் மால்…

பீஸ்ட் டிரைலரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அம்சமாக அந்த ஷாப்பிங் மால் அமைந்தது. இந்நிலையில் இந்த ஷாப்பிங் செட் உருவாக்கப்பட்டது குறித்து நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பீஸ்ட் படத்தின் கலை இயக்குனர் கிரண் பேட்டி அளித்துள்ளார். அதில் இந்த செட் அமைக்கப்பட்டது குறித்த பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

Art director reveals Stories behind beast set

அந்த நேர்காணலில் ’முதல்ல ஒரு மால்ல போய் ஷூட் பண்ணனும்னுதான் நெனச்சோம். இங்க கோவிட் சூழ்நில இருந்ததால, ஜார்ஜியால ஒரு மால் பார்த்து அங்க போய் ஷூட் பண்ணலாம்னு பார்த்தோம். ஆனா நம்ம ஊர் ஆட்கள எல்லாம் எப்படி கொண்டுவர்றதுன்னு ஒரு குழப்பம். இதனால் பட்ஜெட் அதிகமாகுற நெலம. அப்புறம்தான் மொத்த மால்லயும் செட் போட்டுடலாம்னு முடிவு பண்ணோம். முதல்ல ஒரு ப்ளோர் மட்டும் செட் போடலாம்னு முடிவு பண்ணி கடைசில மொத்த மால்லும் செட் போட்டுட்டோம். நாங்க போட்டது 60 அடிக்கு மேல உள்ள செட். வழக்கமாக செட் வெளிப்புறம், உள்புறம்னு தனியா போடுவாங்க. ஆனால் நாங்க ஓப்பன் பிளேஸ்ல, ரியல் கன்ஸ்ட்ரக்‌ஷன் மாதிரி இந்த செட்ட போட்டோம். மொத்தம் 5 மாசத்துல போட ப்ளான் பண்ணி, ஆனால் கோவிட் பிரச்சனையால ரெண்டுமாசம் வேல நடக்கல. அதனால மொத்தம் மூனு மாசத்துல இந்த செட்ட போட்டு முடிச்சோம்’ எனக் கூறியுள்ளார். இதுபோல இந்த பேட்டியில் பீஸ்ட் படம் பற்றி பல எக்ஸ்க்ளூசிவ் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

Viral ஹிட் “அரபிக்குத்து” …. இப்ப இந்த மொழிகள்லயும் வந்துடுச்சு – வேற லெவல் update!

அடடே.. BEAST ஷாப்பிங் மால் SET-க்கு பின்னாடி இவ்ளோ இருக்கா… கலை இயக்குனர் EXCLUSIVE பேட்டி வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Art director reveals Stories behind beast set

People looking for online information on Anirudh, Art director Kiran, Beast, Nelson Dilipkumar, Pooja Hegde, Vijay will find this news story useful.