www.garudabazaar.com

"ஜிபி முத்து அண்ணா இருந்தா ஒரு Vibe இருக்கும்".. மிஸ் பண்ணி லைவில் ஃபீல் செய்த ரச்சிதா! Bigg Boss

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Rachitha miss gp muthu in bigg boss house share in live

Also Read | "விக்ரமன் கிட்ட புடிச்ச விஷயம் அதுதான்".. மனம் திறந்த ரச்சிதா..!

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இதனிடையே வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். தொடர்ந்து, ஆறாவது பிக் பாஸ் சீசனின் கடைசி நாமினேஷனும் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் அரங்கேறி இருந்தது.

Rachitha miss gp muthu in bigg boss house share in live

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்ட சிலரும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி உள்ளிட்டோரும் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த ரச்சிதா, நேயர்களுக்காக லைவில் தோன்றி இருந்தார். இதில், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் சக போட்டியாளர்கள் குறித்தும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

Rachitha miss gp muthu in bigg boss house share in live

அப்போது பிக் பாஸ் வீட்டில் தனது ஃபேவரைட் போட்டியாளர்கள் குறித்து பேசிய ரச்சிதா, ஷிவின், ஜனனி உள்ளிட்டோரை குறிப்பிட்டிருந்தார். அதே போல, ஜிபி முத்துவையும் பேவரைட் என குறிப்பிட்டு பேசிய ரச்சிதா, "ஜிபி முத்து அண்ணா இருக்கிற வரைக்கும் ஒரு மாதிரியான Vibe இருந்தது வீட்டுல. சொல்லப்போனா நான் அவங்க கூட ரொம்பவும் க்ளோஸ் ஆயிட்டேன். ரெண்டு வாரத்திலேயே இவங்க பயங்கரமா பேசி, அவங்க பண்ணிட்டு இருந்த வேலையெல்லாம் பார்க்குறப்ப இப்படியும் ஒருத்தவங்க இருப்பாங்களான்னு தோணுச்சு. அதனால அவர் ரொம்ப க்ளோஸ் ஆயிட்டாரு. அவரையும் ரொம்ப மிஸ் பண்றேன். ஏன்னா ரெண்டு வாரத்திலேயே போயிட்டாரு, அதுக்கப்புறம் ரொம்ப கனெக்ட் ஆக முடியல. மறுபடியும் அவர பார்க்க முடிஞ்சா ரொம்ப ஹேப்பி" என தெரிவித்தார்.

Also Read | விக்ரமனா? அசிமா?.. ஏடிகே சொன்ன நச் பதில்.. "`டைட்டில் ஜெயிக்கவும் இவருக்கு தான் தகுதி இருக்கு"

தொடர்புடைய இணைப்புகள்

Rachitha miss gp muthu in bigg boss house share in live

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, GP MUTHU, Rachitha, Vijay Television, Vijay tv will find this news story useful.