www.garudabazaar.com

வாரிசு FDFS.. தாய்லாந்தில் இருந்து செனனை வந்து படம் பார்த்த கீர்த்தி சுரேஷ் 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh watched Varisu FDFS at vetri theatre

Also Read | வாரிசு படத்தின் FDFS.. தியேட்டரில் Vibe ஆன TTF வாசன்.. வைரல் வீடியோ!

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.  

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 14 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.  1.4 கோடி இன்ஸ்டாகிராம் கணக்கு உடைய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

Keerthy Suresh watched Varisu FDFS at vetri theatre

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் சுற்றுலா செல்லும் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டு இருந்தார்.  மேலும் கடற்கரையில் அருகில் உள்ள உணவகத்தில் உணவருந்தும் புகைப்படங்களையும், கடற்கரை தீவுகளின் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், தாய்லாந்து நாட்டின் சுற்றுலாவை முடித்து விட்டு சென்னை திரும்பினார். சென்னை திரும்பியதும் சென்னை வெற்றி திரையரங்கில் வாரிசு படத்தினை முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுடன் கண்டு களித்தார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Keerthy Suresh watched Varisu FDFS at vetri theatre

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் இன்று (11.01.2023) வெளியாகி உள்ளது.

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

Keerthy Suresh watched Varisu FDFS at vetri theatre

இன்று வெளியான தமிழ் பதிப்பு வாரிசு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

Also Read | விஜய் வீட்டில் இருந்து வந்த சாப்பாடு.. ருசித்து சாப்பிட்ட ரஷ்மிகா! சமையல் யாருனு பாருங்க 😍

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh watched Varisu FDFS at vetri theatre

People looking for online information on Keerthy Suresh, Varisu, Varisu FDFS will find this news story useful.