Valimai BWE
www.garudabazaar.com

"என்ன மெரட்டுறியா?".. ஆஹா .. இத நாம எதிர்பாக்கலயே.. சைலண்ட்டா தொடங்கிய பாலாஜி Vs சுருதி சண்டை BBUltimate

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 24, பிப்ரவரி 2022: தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களைத் தொடர்ந்து, தற்போது டிஸ்னி ஹாட் ஸ்டாரில்  24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் நான்காம் வாரம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

are you threatening balaji shruthi heated argument BBUltimate

கமல்ஹாசன் விலகல்..

முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவந்த நடிகர் கமல்ஹாசன், விக்ரம் திரைப்பட பணிகளுக்காக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கும் பணியில் இருந்து விலகுவதாக வருத்தத்துடன் அறிவித்து விலகுவதாக அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

புதிய தொகுப்பாளர் சிம்பு..

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை, நடிகர் கமல்ஹாசனுக்கு பதிலாக தொகுத்துவழங்கப் போகும் அந்த தொகுப்பாளர் யார் என்கிற பேச்சுகள் பரவலாக இருந்து வந்தன. ஆனால், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகும் அந்த நபர் வேறு யாருமல்ல, இளம் நடிகர் சிம்பு தான் என்பதை புதிய ப்ரோமோவுடன் டிஸ்னி+ஹாட்ஸ்டார் மாஸாக அறிவித்துள்ளது.

are you threatening balaji shruthi heated argument BBUltimate

போட்டியாளர்கள்

முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பானது போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும், இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக் ஹாசன், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் சுரேஷ், சுஜா, அபினய், ஷாரிக் ஆகியோர் எலிமினேஷனிலும், வனிதா தாமாகவும் வெளியேறினர். 

ஏஞ்சல் - டிமான் டாஸ்க்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஏஞ்சல் டிமான் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் தான் தற்போது சுருதி மற்றும் பாலாஜி முருகதாஸ் இருவரிடையே மோதல் உண்டாகியுள்ளது. அப்போது,  பாலாஜி உட்கார்ந்து ஏதோ பேச, அப்போது அவரிடம் பேசும் சுருதி, “லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் பண்ணும்போது இதெல்லாம் இங்கு பேசாதீங்க.. டாஸ்க் முடிந்து பேசுங்க!” என்கிறார்.

are you threatening balaji shruthi heated argument BBUltimate

பாலாஜி Vs சுருதி மோதல்

பதிலுக்கு பாலாஜி, “உங்க கிட்ட பேசல?” என சொல்ல, மீண்டும் சுருதி, “நீங்க டாஸ்க்குக்கு பின் உட்காந்து பேசுங்க.. திட்டுங்க.. கத்துங்க.. என்ன வேணா பண்ணுங்க” என சொல்ல, பாலாஜியோ, “நான் உங்கள பண்ண வேண்டாம்னு சொன்னேனா?” என கேட்கிறார்.

are you threatening balaji shruthi heated argument BBUltimate

அப்போது சுருதி, “என்கிட்ட இப்படிலாம் பேசாதீங்க பாலா.. என் மேல பழி போடாதீங்க” என ஆள்காட்டி விரலை காட்டி பேச், பாலாஜி சுருதியிடம், “என்ன மிரட்டுறியா?” என கேட்கிறார். பதிலுக்கு சுருதி, “கை நீட்டி பேசுனா மிரட்டுறேன்னு அர்த்தமா? டாஸ்க் எப்படி பண்ணனும்னு தான் பேசிகிட்டு இருக்கோம்.. நீயும் கைநீட்டி பேசுற, அப்ப நீ என்ன மிரட்டுறியா?” என கேட்கிறார்.

இப்படி முதல்முறை பாலாஜிக்கும் சுருதிக்கும் யாரும் பெரிதாக எதிர்பாராத வண்ணம் உருவாகியுள்ள மோதல் பிக்பாஸ் வீட்டுக்குள் பரபரப்பாகி வருகிறது.

Also Read: "Proof இருக்கு.. நன்றி ஆரி".. BBUltimate-ல் Demon என்று சொன்ன பாலாஜி.. 4வது சீசன் குறும்படத்தை பகிர்ந்த சனம்!

தொடர்புடைய இணைப்புகள்

are you threatening balaji shruthi heated argument BBUltimate

People looking for online information on Balaji Murugadoss, BBUltimate, BBUltimateTamil, Shruthi, Silambarasan TR, Vanitha Vijayakumar will find this news story useful.