www.garudabazaar.com

உறவினரை சந்தித்து கதறி அழுத அர்ச்சனா... சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அர்ச்சனா மற்றும் ஆஜீத்திற்கு தான் குறைவான வாக்குகள் கிடைத்திருக்கிறது என்ற தகவல் வைரலானது. இருவரில் யார் வெளியேறுவார்கள் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். காரணம் போட்டி என்று வந்துவிட்டால் அர்ச்சனா புலியாக மாறி விடுவார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.அதேபோல் போட்டியில் சுவாரசியத்தை கூட்ட அர்ச்சனா தொடர்வார் என்று பலரும் அக்கருத்து தெரிவித்தனர்.

archana after biggboss video goes viral உறவினரை சந்தித்த அர்ச்சனா

ஆனால் அதிரடியாக அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் நேற்றைய தினம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வீடு திரும்பிய போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியானது. அவரது தங்கை அனிதா தற்போது தாய்மை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உள்ளே நுழைந்ததும் அவரது மகள் ஜாரா, கணவர் மற்றும் தங்கை என அனைவரையும் நெகிழ்ச்சியுடன் கட்டி தழுவிய காட்சிகள் வைரலானது. இந்நிலையில் இன்று அர்ச்சனாவின் மாற்றோரு வீடியோவும் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திரும்பிய பிறகு அர்ச்சனா அவரது உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது நெகிழ்ச்சியாக அவர் கண்கலங்கி இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உறவினரை சந்தித்து கதறி அழுத அர்ச்சனா... சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..! வீடியோ

Tags : Archana

மேலும் செய்திகள்

archana after biggboss video goes viral உறவினரை சந்தித்த அர்ச்சனா

People looking for online information on Archana will find this news story useful.