“இப்படித்தான் அது சாத்தியமாச்சு” ரகசியத்தை புத்தகமாக வெளியிட்ட அனுஷ்கா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து உடல் எடை குறைப்பு பற்றி புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

Anushka Shetty writes a book on her weight loss secret

விஜய், சூர்யா, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்த அனுஷ்கா தமிழில் வெளியான ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக 20 கிலோ எடை அதிகரித்தார். அதன் பின் ‘பாகுபலி’ படத்தில் தேவசேனாவாக நடித்த அனுஷ்காவால் தன்னுடைய பழைய உடல் எடைக்கு திரும்ப முடியவில்லை.

தற்போது பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு, தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ள அனுஷ்கா, அதற்காகத்தான் எடுத்த முயற்சிகளை தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து ‘தி மேஜிக் வெயிட்லாஸ் பில்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட இருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நம்முடைய உடல் எடை அதிகரிப்பு அதற்கான சிகிச்சை முறை என எல்லாமே வாழ்க்கை முறை மாற்றத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.    

அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனஅழுத்தம், உடல் எடை அதிகரிப்பு மற்றும் உறவு முறை, தூக்கம், உணர்ச்சிகள் தொடர்பான எல்லாவகையான பிரச்சினைகளுக்கும் வேறு எந்தச் சிகிச்சை முறையும் இன்றி வாழ்க்கை முறையை சரியாக அமைத்துக்கொண்டாலே போதுமானது.

நமக்கு இருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுகளும் இருக்கின்றன. நமக்கான தீர்வை நாம்தான் தேர்வு செய்ய வேண்டும். அது தொடர்பான தகவல்களை இந்த புத்தகம் உங்களுக்கு வழங்கும்” என குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தகத்துக்கு ஷில்பா ஷெட்டி முன்னுரை எழுதியுள்ளார்.