'மூத்த அண்ணன்' புகைப்படத்தை பகிர்ந்து... 'மாஸ்டர்' இசையமைப்பாளர் உருக்கம்!
முகப்பு > சினிமா செய்திகள்தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்துக்காக தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் இசையமைப்பாளர் அனிருத் பணியாற்றி இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் ‘அந்தக் கண்ண பாத்தாக்க’ என்ற பாடலை யுவன் சங்கர் ராஜாவும், ‘பொலக்கட்டும் பற பற’ என்ற பாடலை சந்தோஷ் நாராயணனும் பாடியிருக்கின்றனர். இப்பாடல்கள்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் அனிருத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், யுவனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து '' என் மூத்த சகோதரரான உங்கள் மீது நிறைய அன்பு இருக்கிறது,'' என தெரிவித்து இருக்கிறார். அனிருத்தின் இந்த ட்வீட் தற்போது லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.
Much love to you my elder brother @thisisysr 🤗 pic.twitter.com/zPq7JAhdM4
— Anirudh Ravichander (@anirudhofficial) March 23, 2020