www.garudabazaar.com

கண்ணீர் வந்தது.. ஆனந்தம் விளையாடும் வீடு படம் குறித்து சேரன் உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரையுலகில் வெகு சில திரைப்படங்கள் மட்டுமே உறவுகளுக்கு புத்துயிர் கொடுப்பதிலும், நட்பைப் பிணைப்பதிலும் முக்கியத்துவம் கொடுக்கின்றது.

 

Anandham Vilayadum Veedu will revive the bonding among families

பாண்டவர் பூமி, ஆனந்தம், விஸ்வாசம், கடைக்குட்டி சிங்கம் போன்ற பல படங்களில், படத்தின் காட்சி முடிந்த உடனே, பார்வையாளர்கள் திரையரங்குகளிலேயே  அமர்ந்து, குறைந்த பட்சம் தாங்கள் பல ஆண்டுகளாக பிரிந்த உறவுகளுக்கு, நெருங்கியவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தியையாவது அனுப்பிய பல சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த மாதிரியான படங்கள் தருவதில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் தான் இயக்குநர் சேரன். அவர் எப்போதும் தூய்மையான பொழுதுபோக்கு அமசங்கள் மற்றும் இதயத்தை வருடும் பாத்திரங்களில் மட்டுமே தோன்றியிருக்கிறார், அது இப்போது “ஆனந்தம் விளையாடும் வீடு “  படத்திலும் தொடர்கிறது. வரும் டிசம்பர் 24, அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன, இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தில் அவர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Anandham Vilayadum Veedu will revive the bonding among families

இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட நடிகர் சேரன் கூறியதாவது, “ஆனந்தம் விளையாடும் வீடு" என் மனதிற்கு மிகவும் நெருக்கமான, சிறப்பு வாய்ந்ததொரு படைப்பு, இதை நான் வெறும் கருத்துக்காக சொல்லவில்லை, படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரும் அதை மனதிற்குள் உண்மையாக உணர்ந்தார்கள். படப்பிடிப்பின் போது நான் என் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தாலும், இப்படத்தை முடித்து திரையிட்ட போது எனக்கு மிக வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. திரையில் நான் தான் நடித்துள்ளேன் என்பதையே மறந்துவிட்டேன், சில காட்சிகளில் அந்தக் கதாபாத்திரத்தைப் பார்த்து என் கன்னங்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. இது எனக்கு மட்டுமல்ல, இந்தப் படத்தில் நடித்த பல நடிகர்களுக்கும் இதே அனுபவம் தான் இருந்தது.

Anandham Vilayadum Veedu will revive the bonding among families

இத்திரைப்படத்தின் இயக்குநர் நந்தா பெரியசாமி நிகழ்த்திய மாயாஜாலம் இது. அவர் ஒரு வெற்றிகரமான திரைப்படத் இயக்குநராக வர வேண்டும் என்று நான் எப்போதும் ஆசைப்பட்டிருக்கிறேன், அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தின் தூணாக இருந்த தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த படத்தின் தயாரிப்பின் போது, அவர் சந்தித்த தொற்றுநோய் போன்ற கடுமையான சவால்களை வேறு எந்த தயாரிப்பாளரும் தாங்கியிருப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இவரைப் போன்ற தயாரிப்பாளர் இண்டஸ்ட்ரிக்கு கிடைத்த வரப்பிரசாதம். கௌதம் கார்த்திக்  மிகவும் அன்பான மனிதர். அவர் குணத்தில் மிகவும் அரிய பண்பை கொண்டிருக்கிறார்.

Anandham Vilayadum Veedu will revive the bonding among families

எல்லா நடிகர்களுக்கும் நவீன நகர்ப்புற பையன் மற்றும் கிராமத்து பையன் என இரண்டு கேரக்டரிலும் ஜொலிக்கும் திறமை இருப்பதில்லை. ஆனால், இது அவருக்கு மிக எளிதாக பொருந்தி இருக்கிறது. நடிகை ஷிவாத்மிகா எனக்கு மகள் போன்றவர். அவருடைய தொழிலின் மீதான அவரது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் கண்டு நான் பெருமைப்படுகிறேன். சரவணன், விக்னேஷ், அல்லது படக்குழுவில் யாராக இருந்தாலும், நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போலவே இருந்தோம், முழு படப்பிடிப்பும் எனக்கு சொர்க்கமாக இருந்தது. திரையரங்குகளிலும் இந்த மனமுழுக்க பரவும் இன்ப அதிர்வை பார்வையாளர்கள் உணருவார்கள். ஆனந்தம் விளையாடும் வீடு குடும்பங்களுக்கிடையேயான பிணைப்பையும், சகோதரத்துவத்தையும் புதுப்பிக்கும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

Anandham Vilayadum Veedu will revive the bonding among families

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, Sri Vaari Film P. ரங்கநாதன் தயாரித்துள்ளார். இப்படத்தில் கௌதம் கார்த்திக், சேரன், ஷிவாத்மிகா ராஜசேகர், சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், சௌந்தரராஜா, முனிஷ்ராஜ், சிங்கம்புலி, "நமோ" நாராயணன், சினேகன், ஜோ மல்லூரி, "நக்கலைட்" செல்லா, சூப்பர்குட் சுப்ரமணி, VJ கதிரவன், மௌனிகா, "மைனா" சுசானே, பிரியங்கா, மதுமிதா, மற்றும பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Anandham Vilayadum Veedu will revive the bonding among families

People looking for online information on Ananthamvilaiyaadumveedu, Cheran, GauthamKarthik will find this news story useful.