"தன் பட புரொமோஷனுக்கு அவர் மட்டும் தான் வந்தாரு..".. பிரபலங்கள் உருக்கம்.. இறுதி அஞ்சலி Video!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ்த்திரைத்துறையில் பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து மரணிக்கும் சோக சம்பவங்கள் நடப்பது அனைவரையும் வேதனைக்குள்ளாகியுள்ளது.

அந்த வகையில் அண்மையில் நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு உள்ளிட்டோர் மரணம் அடைந்தனர். இவர்களைத் தொடர்ந்து பிரபல நகைச்சுவை நடிகரான நெல்லை சிவா நேற்றைய தினம் மரணம் அடைந்த செய்தி பலரையும் உருக்கியுள்ளது.
இவரது மரணம் குறித்து, தெரிவித்துள்ள இயக்குநர் சேரன் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய பல திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார்.. இவரின் நெல்லை தமிழ் அழகு.. கட்டபொம்மனின் முழு வசனத்தையும் நெல்லைத்தமிழில் பேசி என் சிந்தனைகளை வேறுபக்கம் யோசிக்க வைத்தவர். வடிவேலு, விவேக் இவர்களுடனான கூட்டணியில் அதிகம் நடித்திருக்கிறார். ஆத்மா அமைதிகொள்ளட்டும்.” என குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல் திரைப்பிரபலம் ஒருவர் நெல்லை சிவா நடித்தபடம் குறித்த தகவல் ஒன்றை பகிரும்போது, “2019 டிசம்பர் 13 ஆம் தேதி 50 ரூவா என்ற படத்தை எமது நிறுவனம் வழியாக தமிழகமெங்கும் வெளியிட்டோம் . தயாரிப்பாளர் விருப்பப்படி படத்தில் நடித்த சில நடிகர்களை படத்தின் ரிலீஸ் புரோமோஷனுக்கு தொடர்பு கொண்டோம். சிறிய பட்ஜெட் படம் என்பதால் சிலர் வர விரும்பவில்லை. விரும்பிய சிலரால் வர இயலவில்லை.
போனில் கேட்ட அடுத்த நொடி ஒத்துக்கொண்டு சொன்ன நேரத்திற்கு வந்து நின்றவர் அண்ணன் நெல்லை சிவா அவர்கள் மட்டுமே! எங்கள் அலுவலகத்துக்கு மேக்கப்புடன் தயாராக வந்து , நாங்கள் வழங்கிய அவருக்கு பிடித்த எளிய சைவ உணவை விரும்பி சாப்பிட்டு, எந்த எதிர்பார்ப்புமின்றி இன்முகத்துடன் 2 மணி நேரத்திற்கும் மேல் எங்கள் குழுவினருக்கு ஒத்துழைத்து, தன் வலியும் மகிழ்ச்சியும் கலந்த அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு ஊக்கமளிப்பதாகவும் கலகலவெனவும் பகிர்ந்து சென்ற அண்ணன் திரு.நெல்லை சிவா அவர்களின் திடீர் மறைவு வேதனையளிக்கிறது.
ஒரு தனி அடையாளத்தை தமிழ்க் கலையுலகம் இழந்திருக்கிறது. கலைக்கும் கலைஞனுக்கும் அழிவில்லை. அண்ணனின் நல் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்!” என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நெல்லை சிவாவின் பூதவுடல்,நெல்லை மாவட்டம் பணகுடியில் இருக்கும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உறவினர், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி இறுதிச் சடங்கு செய்துவருகின்றனர்.
"தன் பட புரொமோஷனுக்கு அவர் மட்டும் தான் வந்தாரு..".. பிரபலங்கள் உருக்கம்.. இறுதி அஞ்சலி VIDEO! வீடியோ