ANA DE ARMAS நடிக்கும் மர்லின் மன்றோவின் BIO PIC.. வெளியான சூப்பர் போஸ்டர் & டிரெய்லர்!
முகப்பு > சினிமா செய்திகள்அமெரிக்க நடிகை மர்லின் மன்றோவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட Blonde படத்தின் போஸ்டர் & டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Also Read | கபடி வீரராக அதர்வா.. டீச்சராக பிரியா பவானி சங்கர்.. வெறித்தனமான 'குருதி ஆட்டம்' டிரெய்லர்!
இப்படத்தில் அட்ரியன் ப்ராடி, பாபி கன்னாவல், இவான் வில்லியம்ஸ், ஜூலியான் நிக்கல்சன், சேவியர் சாமுவேல், ஸ்கூட் மெக்நெய்ரி, கேரட் டில்லாஹன்ட் மற்றும் லூசி டிவிட்டோ ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜாய்ஸ் கரோல் ஓட்ஸின் Blonde நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை ஆண்ட்ரூ டொமினிக் இயக்கியுள்ளார். Blonde படத்தின் சுருக்க கதையாக, “இந்தத் திரைப்படம் ஹாலிவுட்டின் ஐகான்களில் ஒருவரான மர்லின் மன்றோவின் வாழ்க்கையை தைரியமாக மறுவடிவமைக்கிறது." என கூறப்பட்டுள்ளது. இந்த படம் செப்டம்பர் 23 அன்று Netflix இல் வெளியாகிறது.
இந்த படத்தில் அனா டி அர்மாஸ் முக்கிய பாத்திரத்தில் மர்லின் மன்றோவாக நடித்துள்ளார், டிரெய்லரில் மர்லின் மன்றோ வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்கள் மற்றும் தருணங்கள் இடம்பெற்றுள்ளன. போஸ்டரில் அனாவின் இடது பக்க முகம் சிவப்பு நிற உடையில் போஸ்டரில் அமைந்துள்ளது.
ப்ளாண்ட் படத்தை பிராட் பிட், டெடே கார்ட்னர், ஜெர்மி க்ளீனர், டிரேசி லாண்டன் மற்றும் ஸ்காட் ராபர்ட்சன் ஆகியோரால் நெட்பிளிக்ஸ்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கிறிஸ்டினா ஓ நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். 2022 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக Blonde அமைந்துள்ளது.
Also Read | கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் OPPENHEIMER.. வெளியான வேற லெவல் ரிலீஸ் தேதி டீசர்!
ANA DE ARMAS நடிக்கும் மர்லின் மன்றோவின் BIO PIC.. வெளியான சூப்பர் போஸ்டர் & டிரெய்லர்! வீடியோ