விஜய்யின் உதவியாளர் திருமண நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்ற தளபதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் தனது உதவியாளருடைய மகள் சந்தியாவின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay attended his Personal Assistant's daughters engagement function

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, நடிகர் விஜய் தனது உதவியாளரும், விஜய் ரசிகர் மன்றத்தின் துணை தலைவருமான ராஜேந்தரின் மகளது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்னையில் நேற்று (மார்ச்.3) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தனது குடும்பத்துடன் பங்கேற்ற தளபதி விஜய் மணமக்கள் சந்தியா-விக்னேஷை வாழ்த்தினார். இவ்விழாவில் ‘சர்கார்’ பட நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.