'ஆடை' படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்புக்கு பிறகு ,அமலா பால் தற்போது 'அதோ அந்த பறவை போல' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்துக்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார்.
அமலா பாலின் நடிப்பில் ஆடை படத்துக்கு பிறகு இந்த படம் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவரி 14 அன்று வெளியாகவுள்ளது.
Tags : Adho Andha Paravai Pola, Amala Paul, Jakes Bejoy