'ஆடை' படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்புக்கு பிறகு ,அமலா பால் தற்போது அதோ அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்துக்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் அமலா பாலின் தந்தை பால் வர்க்கீஸ் தற்போது இயற்கை எய்தினார். அவரது இறுதிச்சடங்கு நாளை (22.01.2020) கேரள மாநிலம் கருப்பம்படியில் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : Amala Paul, Paul Varghese