www.garudabazaar.com
iTechUS

பிரபல வெற்றிப்படத்தின் PART-2.. மலேஷியா ஷூட்டிங்கில் விஜய் ஆண்டனிக்கு ஏற்பட்ட காயம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி இசையமைப்பாளராக இருந்து பிரபல நடிகராக மாறியவர்.

Vijay Anthony Injured in Pichaikaran 2 Movie Shooting

Also Read | "ஆட்ட நாயகன்".. உலக அளவில் 'வாரிசு' படத்தின் 5 நாள் வசூல்.. அதிகாரப்பூர்வ தகவல்!

2016ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. மேலும் ஒடியா, மராத்தி, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிச்சைக்காரன்-2 திரைப்படம் தெலுங்கில் பிச்சஃகாடு-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.  இந்த படத்தை விஜய் ஆண்டனியின் சொந்த நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

Vijay Anthony Injured in Pichaikaran 2 Movie Shooting

இந்த படம் வரும் 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமம் & டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மலேஷியாவில் உள்ள லங்காவியில் நடைபெற்ற போது படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி காயமடைந்தார் என தயாரிப்பாளர் தனஞ்செயன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது விஜய் ஆண்டனி நிலையாக இருப்பதாகவும், குணமடைந்து வருவதாகவும் தனஞ்செயன் கூறியுள்ளார். இன்றிரவு விஜய் ஆண்டனி குடும்பத்தினர் மலேஷியா செல்ல உள்ளதாகவும் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.

Also Read | நயன்தாரா & குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாட்டம்.. விக்னேஷ் சிவன் பகிர்ந்த வைரல் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Anthony Injured in Pichaikaran 2 Movie Shooting

People looking for online information on Pichaikaran 2 Movie, Pichaikaran 2 Movie Shooting, Vijay Antony will find this news story useful.