www.garudabazaar.com

கையிலே ஆகாசம்.. விமான பயணத்தில் ரஜினியுடன் ‘சூரரைப்போற்று’ நாயகி.. வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அபர்ணா பாலமுரளி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அருகில் விமானத்தில் பயணம் செய்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Super Star Rajinikanth with Aparna Balamurali Viral Photo

Images are subject to © copyright to their respective owners.

Also Read | LEO ஷூட்டிங் ஸ்பாட்டில் லோகேஷ் கனகராஜூடன் யூடியூபர் இர்பான்.. வைரல் பதிவு!    

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் அணணாத்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்நாளில் ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் வெளியானது. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

Super Star Rajinikanth with Aparna Balamurali Viral Photo

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலும் ரஜினிகாந்த் முக்கிய கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Super Star Rajinikanth with Aparna Balamurali Viral Photo

Images are subject to © copyright to their respective owners.

மேலும் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் குறித்து புதிய அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி நகருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்ற போது விமானத்தில் சூரரைப் போற்று நடிகை அபர்ணா பாலமுரளி உடன் இணைந்து எடுத்த செல்ஃபி புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. "ரசிகையின் அருமையான தருணம். அன்றும் இன்றும் என்றும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்" என அபர்ணா பாலமுரளி பதிவிட்டுள்ளார்.

Also Read | வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதியின் ‘விடுதலை’ .. பார்ட் 2 குறித்த செம அப்டேட்..

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth with Aparna Balamurali Viral Photo

People looking for online information on Aparna Balamurali, Rajinikanth, Super Star Rajinikanth will find this news story useful.