தலைவி கங்கனா ரனாவத் - அச்சு அசல் ஜெயலலிதாவாக மாறிய புது லுக்.! பின்னால் இருக்கும் சீக்ரட்.?
முகப்பு > சினிமா செய்திகள்கங்கனா நடித்து வரும் தலைவி படத்தின் புதிய லுக் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் 'தலைவி'. ஏ.எல்.விஜய் இயக்கும் இத்திரைப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதில் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். அண்மையில் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியின் தோற்றம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்த நிலையில் இன்று கங்கனா ரனாவத்தின் புதிய லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இந்த போட்டோவை வெளியிட்டுள்ளது. இதில் இளம் வயது ஜெயலலிதாவின் லுக்கில் இருக்கும் கங்கனா ரனாவத்தின் போட்டோ ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. எந்தவிதா ப்ராஸ்தடிக் மேக்கப்பும் இல்லாமல், ஸ்பெஷல் எஃபக்ட் இல்லாமல், கங்கனாவின் மன உறுதியே தலைவி படத்தின் இந்த லுக்கிற்கு காரணமாம்.
Kangana in and as #Thalaivi ... without any prosthetics or any special effets Kangana looks like Jaya Amma, shocking, determination can make anything happen #Thalaivi pic.twitter.com/Dtm8wu5fwH
— Rangoli Chandel (@Rangoli_A) February 24, 2020