Viruman Logo Top
www.garudabazaar.com

நடிகர் அஜித் குமாரின் AK61 லுக்.. ரசிகர்கள் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித், ஐரோப்பிய நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் சில நாட்களுக்கு முன் சென்னை திரும்பினார்.

Ajith Kumar AK61 Getup Latest photo with fans

Also Read | மான்ஹாட்டன் தீவில் பூஜா ஹெக்டே.. அட.. ஹேர் ஸ்டைல் பண்ணது இவங்கதானா? செம ஃபோட்டோஸ்

நடிகர் அஜித்குமார் சமீபத்தில் மாநில அளவிலான 47வது துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி ரைஃபிள் கிளப் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே. நகர் ராணுவ ரிசர்வ் கேம்பஸில்   (26.07.2022) அன்று நடந்தது.

இதற்காக நடிகர் அஜித் குமார் சென்னையில் இருந்து திருச்சி ரைஃபிள் கிளப் சென்றார். அங்கு துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் கலந்து கொண்டார்.  காலையில் போட்டிகள் முடிந்ததும் நடிகர் அஜித் குமார் செனனை திரும்பிவிட்டார்.

Ajith Kumar AK61 Getup Latest photo with fans

அந்த போடடிகளில் 4 தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் ரசிகர்களுடன் சென்னையில் எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித்குமார் AK 61கெட் அப்பில் வெண்ணிற சட்டையில் காட்சியளிக்கிறார். அஜித்தின் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

Ajith Kumar AK61 Getup Latest photo with fans

AK 61

நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

Ajith Kumar AK61 Getup Latest photo with fans

அஜித் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதேவேளையில் தமிழகத்தில் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

முன்னதாக AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர்.

Ajith Kumar AK61 Getup Latest photo with fans

முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கியது.

சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.

Also Read | விக்ரம் நடிக்கும் கோப்ரா.. ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ் கொடுத்த பட நிறுவனம்! தரமான அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK61 Getup Latest photo with fans

People looking for online information on Ajith Kumar, Ajith kumar AK61 Getup, Ajith Kumar with His Fans, AK 61 will find this news story useful.