www.garudabazaar.com

குழந்தைகளுடன் பிரிட்டனில் வலம் வரும் நடிகர் அஜித்.. இணையத்தை கலக்கும் சூப்பர் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இங்கிலாந்து நாட்டில் அஜித் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Ajith Kumar with his daughter Anoshka and son Advik

Also Read | மாநிலங்களவை எம்.பி ஆகிறார் இசைஞானி இளையராஜா.. பிரதமர் மோடி அறிவிப்பு..!

நடிகர் அஜித் தனது திரைப்பட படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பைக்கை எடுத்துக்கொண்டு ரோட் ட்ரிப் போவது வாடிக்கையான ஒன்று. அது போல் தனது BMW  பைக்கை எடுத்துக்கொண்டு  அஜித் ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் டிவிட்டரில் சில புகைப்படங்களை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். ஐரோப்பா நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் தற்போது நடந்து வருகிறது. இங்கிலாந்தில் தற்போது இந்த பயணம் நடந்து வருகிறது.

சிலநாட்களுக்கு முன் பிரிட்டன் லண்டன் நகர வீதிகளில் (ஹேட்டன் கிராஸ் நிலையம்) ரசிகர்களுடன் அஜித் எடுத்த புகைப்படங்கள் வைரலாகின.

Ajith Kumar with his daughter Anoshka and son Advik

இந்நிலையில் நடிகர் அஜித் லண்டன் நகரில் ஒரு குழந்தையை கையில் ஏந்திய நிலையில் உள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்துக்கு பின்னணியில் அஜித்தின் மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் காணப்படுகின்றனர். லண்டனில் தற்போது அஜித் குடும்பத்தினர் உடன் நேரம் செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.

Ajith Kumar with his daughter Anoshka and son Advik

AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  ஜூன் 15ஆம் தேதி முதல் துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல்.. நடன இயக்குனர் கொடுத்த Exclusive அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar with his daughter Anoshka and son Advik

People looking for online information on Ajith Kumar, Ajith kumar family, Ajith Kumar recent photos, Ajith Kumar son Advik, Ajith Kumar with his daughter Anoshka will find this news story useful.