www.garudabazaar.com

துணிவு படத்தில் நடித்த சக நடிகருக்கு அஜித் கொடுத்த தரமான GIFT.. வைரலாகும் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Ajith Kumar Gifted Stunt Protection Kit to John Kokken

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

Ajith Kumar Gifted Stunt Protection Kit to John Kokken

துணிவு படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

நடிகர்கள் ஜி.எம். சுந்தர், ஜான் கொக்கன், மஞ்சு வாரியர், அமீர் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் ஏற்கனவே டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக அறிவித்துள்ளனர்.

Ajith Kumar Gifted Stunt Protection Kit to John Kokken

இந்நிலையில் நடிகர் ஜான் கொக்கன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் "சண்டைக்காட்சிகளை படமாக்கும் போது காயம் ஏற்படாமல் இருக்க உதவும் அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை நடிகர் அஜித் தனக்கு பரிசளித்துள்ளதாக" கூறியுள்ளார். மேலும் அந்த அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Gifted Stunt Protection Kit to John Kokken

People looking for online information on Ajith Kumar, John Kokken, Thunivu will find this news story useful.