Battery
The Legend
www.garudabazaar.com

திருச்சியில் நடிகர் அஜித்தை சந்தித்த ரசிகர்.. வைரலாகும் நெகிழ்ச்சியான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித், திருச்சி நகரில் ரசிகருடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.

Ajith Kumar AK with His fan at Trichy KK Nagar

Also Read | AK61 கெட்-அப்பில் சென்னைக்கு அருகில் உள்ள போலீஸ் அகாடமியில் நடிகர் அஜித்.. வைரல் வீடியோ!

நேற்று நடிகர் அஜித்குமார் சென்னைக்கு அருகில் உள்ள மொரை வீரபுரம் போலீஸ் பயிற்சி மைய அகாடமியில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டார். அங்குள்ள காவலர்களிடம் அஜித் உரையாடும் வீடியோ  வெளியாகி வைரலானது.

இந்நிலையில் மாநில அளவிலான 47வது துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி ரைஃபிள் கிளப் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே. நகர் ஆயுதப்படை ரிசர்வ் கேம்பஸில் நேற்று  (26.07.2022) துவங்கி உள்ளது.

Ajith Kumar AK with His fan at Trichy KK Nagar

இதற்காக நடிகர் அஜித் குமார் சென்னையில் இருந்து திருச்சி ரைஃபிள் கிளப் சென்றுள்ளார். அங்கு துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் கலந்து கொண்டார். போட்டிகள் முடிந்ததும் நடிகர் அஜித் குமார்  சென்னை திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கி சுடும் போட்டிகள் ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித் குமாருடன் புகைப்படம் எடுத்த தாரிக் எனும் ரசிகர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சியான பதிவையும் பதிவிட்டுள்ளார். அதில் "

தாரிக் ரிலாக்ஸ்..! நான் இன்னும் அந்த தருணத்தில் தான் இருக்கிறேன்.. என் கைகள் இன்னும் நடுங்குகின்றன.. ஆனால் ஆம் உண்மைதான்! ஒரு கனவு நனவாகியது!

Ajith Kumar AK with His fan at Trichy KK Nagar

எனக்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை. முற்றிலும் உணர்ச்சிவசமானது..! ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால்.. நான் இப்போது உலகின் மிக அதிர்ஷ்டசாலி.. அவரைப் பார்ப்பது (நடிகர் அஜித் குமார்) எனக்கு ஒரு கனவாக இருந்தது, அவரைச் சந்திக்க நான் பல பைத்தியக்காரத்தனமான செயல்களைச் செய்தேன்.

Ajith Kumar AK with His fan at Trichy KK Nagar

ஆனால் யுனிவர்ஸ் வேறு திட்டங்களைக் கொண்டுள்ளது, அது உங்களுக்குத் தேவையானதைத் தரும். அவரை (நடிகர் அஜித் குமார்) சந்தித்தேன், என் அன்பை அவரிடம் தெரிவித்தேன், அவர் என்னிடம் பேசினார்! அந்த குரல்! அடடா! லவ் யூ சொன்னேன் சார்! லவ் யூ சொன்னார்!

Ajith Kumar AK with His fan at Trichy KK Nagar

25 வருடமாக அஜித் ரசிகன் நான்! கண்ணீர் வருகிறது! என்றென்றும் பெருமைப்படும் AK ரசிகன்!!" என பதிவிட்டுள்ளார்.

Also Read | திருச்சியில் நடிகர் அஜித்.. இதுக்கு தான் வந்திருக்காரா? முழு தகவலுடன் வைரல் ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK with His fan at Trichy KK Nagar

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar with His fan, AK61 will find this news story useful.