Kaateri logo top
www.garudabazaar.com

AK 61-ல் இணைந்த தேசிய விருது வென்ற ஸ்டண்ட் இயக்குனர்.. போட்டோவுடன் வெளிவந்த சூப்பர் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிக்கும் AK61 படத்தில் தேசிய விருது வென்ற ஸ்டண்ட் இயக்குனர் இணைந்துள்ள புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Ajith Kumar AK 61 Team Celebrating National Award Winner Supreme Sundar

Also Read | "ஒரு சுவாரஸ்யமான பயணம் 'Start' ஆயிடுச்சு..." விருமன் மேடையில் சூர்யா சொவ்லும் 'Secret'

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

AK61 படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.

Ajith Kumar AK 61 Team Celebrating National Award Winner Supreme Sundar

AK61 படத்திற்காக 47 நாட்கள் இடைவிடாது தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கியது.

Ajith Kumar AK 61 Team Celebrating National Award Winner Supreme Sundar

இந்த சென்னை படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தாக கூறப்படுகிறது.  முக்கிய சாலைகளில் பரபரப்பான பகுதியில் படப்பிடிப்பு நடந்தது.

இந்த சென்னை படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியர் கலந்து கொண்டுள்ளதாக தெரிகிறது.  நடிகை மஞ்சு வாரியருடன் நடிகை பூஜா இருக்கும் புகைப்படம் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

Ajith Kumar AK 61 Team Celebrating National Award Winner Supreme Sundar

இந்நிலையில் ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தரின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. AK61 படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சுப்ரீம் சுந்தர் கேக் வெட்டும் போது அருகில் படத்தின் இயக்குனர் எச்‌. வினோத், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, கலை இயக்குனர் மிலன் ஆகியோர் உள்ளனர்.

Ajith Kumar AK 61 Team Celebrating National Award Winner Supreme Sundar

இதன் மூலம் AK61 படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக சுப்ரீம் சுந்தர் பணிபுரிவது உறுதியாகியுள்ளது. சுப்ரீம் சுந்தர் சமீபத்தில் ஐயப்பனும் கோஷியும் படத்திற்கு தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த படப்பிடிப்பில் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன.  நடிகர் அஜித் ஐரோப்பிய நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிலநாட்களுக்கு முன் சென்னை திரும்பினார். பின்னர் திருச்சி ரைஃபிள் கிளப் சென்றது குறிப்பிடத்தக்கது.

Also Read | "தேசிய விருது வாங்குனது எனக்கே முதல்'ல தெரியல".. விருமன் விழாவில் சூர்யா..!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK 61 Team Celebrating National Award Winner Supreme Sundar

People looking for online information on Ajith Kumar, AK 61 Team, AK61, H Vinoth, Supreme Sundar will find this news story useful.