கோலிவுட்டில் வெகு சில நடிகைகளே இயக்குநராகவும் உள்ளனர். ரேவதி, சுஹாசினி மணிரத்னம், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் இரண்டு துறையிலும் பிரகாசித்துள்ளனர். இந்நிலையில், 5 ஸ்டார் படம் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமான கனிகா விரைவில் ஒரு குறும்படத்தை ரிலீஸ் செய்யவிருக்கிறார்.
![இயக்குநராகும் நடிகை கனிகா | kaniha become a director இயக்குநராகும் நடிகை கனிகா | kaniha become a director](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/kaniha-become-a-director-photos-pictures-stills.jpg)
ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட பிரபல படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் கனிகா அதிகம் கவனம் பெறவில்லை. மலையாளத்தில் சில படங்கள் நடித்த அவர் திரை வாழ்க்கைக்கு ப்ரேக் எடுத்து, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து விக்ரமின் கோப்ரா படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். போலவே, விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்திலும் குறிப்பிடும்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது இன்ஸ்டாகிராமில் தான் இயக்கிக் கொண்டிருக்கும் முதல் குறும்படத்தைப் பற்றி சில தகவல்களை வெளியிட்டுள்ளார் கனிகா. முதல் தடவையாக கேமராவுக்குப் பின்னால் நிற்கிறேன். சினிமா கடல் போன்றது, அதில் நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது. எனக்கு மிகவும் பிடித்த ஒரு சப்ஜெக்ட்டை ஷார்ட் பிலிமாக எடுக்கிறேன். தற்போது ஃபோஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.