''தல 60" படத்தில் நடிக்கிறாரா அஜய் தேவ்கன் ? விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 30, 2019 11:47 AM
அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தலா 60’ திரைப்படத்தின் அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டரில் சமீபத்தில் வெளியிட்டார்.
![Ajay Devgn will not play the villain role in Ajith's Thala60 Ajay Devgn will not play the villain role in Ajith's Thala60](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/ajay-devgn-will-not-play-the-villain-role-in-ajiths-thala60-photos-pictures-stills.png)
அவரது ட்வீட்டில், AK60 திரைப்படத்தை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அஜித் குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் பூஜை ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளார்
இப்படம் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்று ஏற்கனவே Behindwoods தளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், நடிகர் அஜித் தல60 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என்னும் தகவலை Behindwoods தளத்தில் வெளியிட்டிருந்தோம் இதை தொடர்ந்து இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஒப்பந்தமாகியுள்ளதாக பல ஊடகங்களில் தகவல் வெளியானது இதுதொடர்பாக எங்களது நெருங்கிய கோலிவுட் வட்டாரங்களை அணுகியபோது அவ்வாறு வெளியான தகவல் முற்றிலும் நம்பகத்தன்மை அற்றது தல ரசிகர்கள் யாரும் அது நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். கூடிய விரைவில் 'தல 60' பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.