www.garudabazaar.com

விஷால் நடிக்கும் 'லத்தி'.. முக்கியமான பண்டிகையை நாளில் ரிலீஸ்! செம்ம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷால், சுனைனா நடிக்கும் 'லத்தி' படத்தின் ரிலீஸ் அப்டேட் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Vishal Starring Laththi Movie Release Update

Also Read | PS1, இரவின் நிழல், VTK படங்களின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்.. AR ரஹ்மான் கொடுத்த செம அப்டேட்!

தமிழில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் அதன்பிறகு நடித்த சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, இரும்புத்திரை ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது. இதையடுத்து அவர் தற்போது புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கும் லத்தி படத்தில் நடித்து வருகிறார்.

Vishal Starring Laththi Movie Release Update

லத்தி படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து வருகின்றனர். இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

பாலசுப்ரமணியம் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Vishal Starring Laththi Movie Release Update

லத்தி திரைப்படம் படம் ஐந்து மொழிகளில் PAN INDIA படமாக உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில் இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பகை சூழும் படலம் என்ற வாசகம் இந்த போஸ்டரிலும் இடம் பெற்றுள்ளது.

Vishal Starring Laththi Movie Release Update

கடந்த 24.07.2022 அன்று இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read | நயன்தாராவின் பிறந்தநாளில் வெளியான CONNECT படத்தின் ஹாரர் டீஸர்.. சும்மா மிரட்டுதே!

தொடர்புடைய இணைப்புகள்

Vishal Starring Laththi Movie Release Update

People looking for online information on Laththi, Laththi Movie Release Update, Vishal will find this news story useful.