www.garudabazaar.com

LATEST: மீண்டும் நடிகர் தனுசுடன் இணையும் பிரபல டான்ஸ் மாஸ்டர்! இவர் தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் (Dhanush) தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கிறார்.

Again Jani master choreographed song in Dhanush’s

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜீம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

Again Jani master choreographed song in Dhanush’s

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்துவருகிறது. மேலும் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் செப்டெம்பர் 3 ஆம் தேதியில் இருந்து துவங்கி நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Again Jani master choreographed song in Dhanush’s

இங்கு தனுஷ் பங்கு பெறும் பாடல் காட்சி படமாக்கபட்டதாக தெரிகிறது. இதனை உறுதிபடுத்தும் விதமாக இந்த படத்தின் BTS புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த BTS புகைப்படத்தில் டான்ஸ் மாஸ்டர் ஜானியுடன் தனுஷ் இருக்கிறார். எனவே இந்த படத்தில் மாஸ்டர் ஜானி(Jani Master) நடனம் அமைப்பது உறுதியாகி உள்ளது. இந்த கூட்டணி ஏற்கனவே ரவுடி பேபி (மாரி-2), சில் ப்ரோ (பட்டாஸ்) பாடல்களுக்கு இணைந்து பணியாற்றி உள்ளது. 

 

Tags : Dhanush

Again Jani master choreographed song in Dhanush’s

People looking for online information on Dhanush will find this news story useful.