www.garudabazaar.com

BREAKING: தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் ஷூட்டிங் இந்த ஊர்ல தான்! செம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கிறார்.

dhanush mithran jawahar thiruchitrambalam movie update

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

dhanush mithran jawahar thiruchitrambalam movie update

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்துவருகிறது. மேலும் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

dhanush mithran jawahar thiruchitrambalam movie update

அங்கு நித்யாமேனன் - தனுஷ் பங்குபெறும் பாடல் காட்சிகள் நடைபெற்று வருகின்றன. அதனைத்தொடர்ந்து குற்றாலத்தில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெறுகிறது. செப்டெம்பர் 10 அன்று நடிகை ராஷி கண்ணா படக்குழுவுடன் இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

dhanush mithran jawahar thiruchitrambalam movie update

People looking for online information on Dhanush, Nithya Menon, Raashi Khanna will find this news story useful.