www.garudabazaar.com

LATEST: "சிவக்குமாரின் சபதம்" படத்தின் பக்காவான கமர்சியல் டிரெய்லர்! எப்படி இருக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போது சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி "சிவக்குமாரின் சபதம்" படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார்.

Sivakumarin Sabadham Official Trailer Hiphop Tamizha Released

சமீபத்தில் இந்த படத்தின் மூன்று பாடல்களும் வெளியிடப்பட்டன. மேலும், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று (19.09.2021) வெளியாகி உள்ளது. அதில் காமெடி ரொமான்ஸ் வகைமையில் ஆக்சன் கலந்து கமர்சியலாக உருவாகி உள்ளது. இந்த டிரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் டிரெய்லரின் முக்கிய அம்சமாக எடிட்டிங்கும், பின்னனி இசையும் அமைந்துள்ளது. 

Sivakumarin Sabadham Official Trailer Hiphop Tamizha Released

இந்த 'சிவகுமாரின் சபதம்' திரைப்படம் சென்சார் போர்டு மூலம் கிளீன் 'U' சான்றிதழை பெற்றுள்ளது. இந்த படம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது என தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

Sivakumarin Sabadham Official Trailer Hiphop Tamizha Released

தற்போது ஆதி, சத்ய ஜோதி தயாரிப்பில் அட்லியின் உதவியாளர் அஸ்வின் ராம் இயக்கும் அன்பறிவு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் முதல் லுக் டீசர் வெளியாகியது. இதில் ஆதியுடன் விதார்த், நெப்போலியன் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் முதல்முறையாக ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக நம்பந்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

LATEST: "சிவக்குமாரின் சபதம்" படத்தின் பக்காவான கமர்சியல் டிரெய்லர்! எப்படி இருக்கு? வீடியோ

Sivakumarin Sabadham Official Trailer Hiphop Tamizha Released

People looking for online information on Hip Hop Tamizha Adhi will find this news story useful.