www.garudabazaar.com

தனுஷ் நடிக்கும் 'மாறன்' படத்தின் வைரலாகும் BTS புகைப்படம்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ், தனது 43 வது படமாக தற்போது "மாறன்" படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.  இந்த படத்திற்காக மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் சர்பு, சுகாஸ் திரைக்கதைக்காக பணிபுரிகின்றனர்.

dhanush maaran movie bts picture went viral on social media

தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

dhanush maaran movie bts picture went viral on social media

திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

dhanush maaran movie bts picture went viral on social media

அதில் சண்டைப்பயிற்சி இயக்குனர் சில்வா உடன் கார்த்திக் நரேன் உள்ளார்.

dhanush maaran movie bts picture went viral on social media

People looking for online information on Dhanush, Karthick Naren will find this news story useful.