Yashika: "Miss You பவானி.. Life முழுக்க குற்ற உணர்ச்சியோட..".. சிகிச்சைக்கு பின் யாஷிகாவின் உருக்கமான முதல் Post!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈசிஆர் சாலையில் நள்ளிரவு நேரத்தில் காரை அதிவேகமாக இயக்கிச் சென்றதை அடுத்து விபத்துக்குள்ளானார்.
இந்த விபத்தில் யாஷிகாவும், அவருடன் காரில் பயணித்த இரண்டு ஆண் நண்பர்களும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைகளை எடுத்து வந்தனர். இதனிடையே இவர்களுடன் சென்ற யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவானி என்பவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து ஐசியு-வில் தீவிர சிகிச்சை பெற்று வந்த யாஷிகா தற்போது கண்விழித்து பவானி இறந்தது பற்றிய தகவல்களை அறிந்து, இதுபற்றிய உருக்கமான பல தகவல்களை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் தமக்கு ஏற்பட்டுள்ள குற்றவுணர்வு பற்றியும் இந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதில், “நான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் விஷயங்களை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. காலம் முழுவதும் இந்த குற்ற உணர்வோடு எப்படி வாழ்வது என்றும் தெரியவில்லை. என் உயிரைக் காப்பாற்றியதற்கு கடவுளுக்கு நன்றி சொல்வதா.. இல்லை என்னுடைய பெஸ்ட் தோழியின் உயிரை எடுத்ததற்கு பழிப்பதா என்று தெரியவில்லை.
ஒவ்வொரு நொடியும் பவானியை மிஸ் பண்ணுகிறேன். எனக்கு தெரியும் பவானி, உன்னால் என்னை மன்னிக்கவே முடியாது. உன் குடும்பத்தை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளி இருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு நொடியும் நான் உன்னை மிஸ் பண்ணி கொண்டே இருப்பேன் என்பதை அறிவாயாக. என்றாவது ஒரு நாள் நீ என்னிடம் வருவாய், அதற்காக பிரார்த்திக்கிறேன். வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வோடு வாழப் போகிறேன்.
எனது இந்த வருட பிறந்த நாளை நான் கொண்டாடப் போவதில்லை, என் ரசிகர்களும் கொண்டாட வேண்டாம். பவானியின் குடும்பத்தினர் தாமதமாக என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்களின் குடும்பத்திற்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டுகிறேன். கடவுள் அவர்களுக்கு நிறைய வலிமையை தரவேண்டும்” என்று கூறியதுடன் பவானியின் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார் யாஷிகா.
மேலும் பவானியின் புகைப்படத்தை பகிர்ந்து, இன்னொரு பதிவையும் யாஷிகா வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், “நீ இன்று எங்களுடன் இல்லாததற்கு நான் ஒரு காரணமாக இருப்பேன் என்று தெரியவில்லை” என்று உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.
YASHIKA: "MISS YOU பவானி.. LIFE முழுக்க குற்ற உணர்ச்சியோட..".. சிகிச்சைக்கு பின் யாஷிகாவின் உருக்கமான முதல் POST! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "I Will Forever Feel Guilty...": Yashika Aannand's First-ever Statement After Her Accident
- This Actor Gets Injured In An Unexpected Accident While Filming For An Action Sequence Ft Jai
- Yashika Aanand Asking About Bhavani Her Mother Emotional
- Yashika Aanand Car Accident Eye Witness Exclusive Byte Video
- Yashika Aannand’s Sister Osheen Gives Important Health Update
- VIDEO: "Sema Speed Car La...median La Poyi...": Bystanders Recount The Dreadful Night Of Yashika's Accident
- Aishwarya Dutta Tweet Over Yashika Aannand Health Recover
- Actress Yashika Aanand Car Accident ICU Health Update
- Yashika Aannand's HEALTH UPDATE Arrives! This Bigg Boss Tamil Actress Reveals Deets
- Yashika Aanand Friend Bhavani Taken Video Before Car Accident
- Was This The Last Video Just Before Yashika Aannand's Car Accident?
- Details Of Actress Yashika Aanand's Car Accident - Here's What You Need To Know
தொடர்புடைய இணைப்புகள்
- Yashika நண்பர் Police-ல் வாக்குமூலமா? உண்மையில் அன்னிக்கு Night இதுதான் நடந்ததா..?
- யாஷிகா Car சம்பவம்! - Air Bags இருந்தும் இவ்வளவு அடிபட்டது ஏன்? - Car Safety Expert பேட்டி!
- கைதாகிறாரா யாஷிகா ? 'வழக்கில் திருப்பம்'..தீவிரம் காட்டும் போலீஸ் | Yashika Car Accident
- விரைவில் கைதாகிறாரா YASHIKA? Police எடுத்த அதிரடி முடிவு !
- Yashika-க்கு Accident எப்படி நடந்தது...முக்கிய காரணங்கள் என்ன ?..
- யாஷிகா விபத்தின் முக்கிய காரணம்..போலீஸ் விசாரணையில் செம TWIST..லீக்கான திடுக்கிடும் தகவல்கள்
- "Yashika-க்கு நினைவு வந்துருக்கு, Surgery முடிஞ்சிருக்கு...அடுத்த கொஞ்ச நாட்கள் Critical Stage தான்"
- "Yashika வண்டிக்குள்ள 2 பசங்க இருந்தாங்க, அந்த பொண்ணை காப்பாற்றி இருக்கலாம்" - Eyewitness Interview
- அம்மா பவணி எங்கம்மா ? 'கதறி அழும் யாஷிகா'..மனம் உருகும் தாயார் | Yashika Car Accident
- "அந்த பொண்ணு எகிறி போயி!" Yashika சம்பவம்! உறைய வைக்கும் திக் திக் நொடிகள்! நேரில் பார்த்தவர் பேட்டி
- "Yashika-கு Multiple Fractures...Surgeries இன்னும் இருக்கு..." Yashika's Sister Emotional
- Yashika Car Accident: தோழி மரணம் குறித்து அக்கா வெளியிட்ட Emotional பதிவு