Annatha Others ua
www.garudabazaar.com

பிச்சைக்காரன் 2-ஐ அடுத்து, வருகிறது விஜய் ஆண்டனியின் மாஸ் ஹிட் படத்தின் 2-ஆம் பாகம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

INFINITI FILM VENTURES வழங்கும், விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும், மழை பிடிக்காத மனிதன் பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் சலீம் படத்தின் 2-ஆம் பாகன் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

after pichaikaaran2 Vijay Antony another film sequel

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சலீம்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் தனிச்சிறப்பான ஒரு திரைப்படமாகும். விமர்சன ரீதியில் பாராட்டுக்களை குவித்த இந்த திரைப்படம், வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மிகச்சிறப்பான திரைக்கதைக்காகவும், உணர்வுப்பூர்வமான கதைக்காகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது இத்திரைப்படம். விஜய் ஆண்டனியின் அற்புதமான நடிப்பு திரையரங்குகளில் கைதட்டல்களையும், விசில் சத்தத்தையும் குவித்தது.

இசை, நடிப்பு, இயக்கம், எடிட்டிங் என பன்முக திறமை கொண்ட கலைஞரான விஜய் ஆண்டனி, ‘நான்’ படத்தின் தீம் என்னவோ அதன் தொடர்ச்சியாக சலீம் படத்தில் நடித்திருந்தார்.  இந்நிலையில் சலீம் படத்தின் 2-ஆம் பாகமான “மழை பிடிக்காத மனிதன்” படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார்.

after pichaikaaran2 Vijay Antony another film sequel

இப்படத்தை ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் எழுதி, இயக்குகிறார். ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இப்படம், முதல் முறையாக தாமன் & தியூ பகுதியில் படமாக்கப்படும் முதல் தமிழ்ப்படம் என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு மத்தியில் இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மிக முக்கியமான பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். கன்னட திரையுலக நடிகர்களான தனஞ்செயா மற்றும் ப்ருத்வி அம்பர் இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்கள்.

மேலும் சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாகூர் பிரணிதி ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குநர் ரமணா ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

after pichaikaaran2 Vijay Antony another film sequel

விஜய் ஆண்டனி மற்றும் விஜய் மில்டன் திரைப்படங்களில் எப்போதும் ஒரு பொதுவான அம்சம் இருக்கும், வித்தியாசமான கதைக்களம் மற்றும் மனதைக் கவரும் ஆக்சன் காட்சிகள் இவர்கள் படத்தில் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் இந்த இரண்டு அம்சங்களுடன், மழை பிடிக்காத மனிதன் படத்தில், பிரம்மிக்க வைக்கும் அதிரடி காட்சிகள் இடம்பெறவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்.

மழை பிடிக்காத மனிதன் படம் சலீம் படத்தின் நேரடித் தொடர்கதை என்றும் தயாரிப்பாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இப்படத்தை எழுதி இயக்குவது மட்டுமின்றி, ‘மழை பிடிக்காத மனிதன் (சலீம்-2) படத்துக்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவும் செய்கிறார். விஜய் ஆண்டனி பாடல்களுக்கு இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையை கவனிக்கிறார்.

after pichaikaaran2 Vijay Antony another film sequel

படத்தொகுப்பாளராக லியோ ஜான்பால், கலை இயக்குநராக K.ஆறுசாமி, ஸ்டண்ட் மாஸ்டராக சுப்ரீம் சுந்தர், நடன இயக்குநராக ஸ்ரீதர், ஸ்டில்களை மகேஷ் ஜெயச்சந்திரன், விளம்பர வடிவமைப்பாளராக பவன் (சிந்து கிராபிக்ஸ்), ஆடை வடிவமைப்பாளராக ஷிமோனா ஸ்டாலின் பணிபுரிகின்றனர்.

“மழை பிடிக்காத மனிதன்” படத்தை கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் B,பங்கஜ் போஹ்ரா மற்றும், S.விக்ரம் குமார் ஆகியோர் INFINITI FILM VENTURES தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், தயாரிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

after pichaikaaran2 Vijay Antony another film sequel

People looking for online information on Infinite Pictures, Kodiyil Oruvan, Naan, Pichaikaaran, Salim, Vijay Antony will find this news story useful.