RRR Others USA
www.garudabazaar.com

சென்சாரான விஜய் சேதுபதி நடித்த புதிய படம்! விரைவில் ரிலீஸ்.. முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி,முகில் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.

Vijay Sethupathi Maa Manithan censored with clean "U"

விஜய் சேதுபதி நடித்து மாமனிதன், இடம் பொருள் ஏவல், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளீர், காத்துவாக்குல ரெண்டு காதல், விடுதலை, விக்ரம், மும்பைக்கர், பிசாசு2, VJS 46 போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. சமீபத்தில் மாமனிதன் படத்தின் முன்னோட்டம் வெளியானது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தமது YSR FILMS PVT LTD-ன் கீழ் இந்த படத்தை தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்துக்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார்.

Vijay Sethupathi Maa Manithan censored with clean "U"

சென்சாரான மாமனிதன்

இந்நிலையில் இந்த மாமனிதன் படத்தின் சென்சார் முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய் சேதுபதி தனது முகநூல், டிவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். அதன்படி இந்த படம் CBFC மூலம் U சான்றிதழ் பெற்றுள்ளது. பேமிலி டிராமா த்ரில்லர் வகைமையில் இந்த படம் உருவாகி உள்ளது. விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது.

Vijay Sethupathi Maa Manithan censored with clean "U"

இடி முழக்கம்

இந்த படங்களை தொடர்ந்து, இயக்குனர் சீனு ராமசாமி,  ஸ்கைமேன் பிலிம்ஸ் சார்பாக கலைமகன் முபாரக் தயாரிப்பில் ஜீ வி பிரகாஷ் குமார், காயத்ரி நடிப்பில் இடி முழக்கம் எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் செவிலியர் கதாபாத்திரத்தில், பள்ளி மாணவி, செவிலியர் மற்றும் ஒரு தாய் என மூன்று நிலைகளிலும் ஜி.வி.பிரகாசுக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். விப்பேரரசு வைரமுத்து பாடல் வரிகளை எழுத, இயக்குநர் சீனு ராமசாமியுடன் 'தென்மேற்கு பருவக்காற்று மற்றும் நீர் பறவை' போன்ற படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் NR ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  ஆக்சன் திரில்லர் வகைமையில் (Genre) உருவாகும் இப்படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi Maa Manithan censored with clean "U"

People looking for online information on Gayathrie, Ilaiya raja, Ma manithan, Seenu ramasamy, Vijay Sethupathi, Yuvan Shankar Raja will find this news story useful.