www.garudabazaar.com

ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் வரிசையில் கலக்கும் நடிகை வேதிகா! படுவைரல் BIKINI ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாலத்தீவு: நடிகை வேதிகாவின் BIKINI புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

actress vedhika hot bikini pictures from Maldives beach

இந்தி உள்ளிட்ட இந்தியாவில் முன்னணி மொழிகளில் விளம்பர படங்களில் நடித்து பின் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை வேதிகா. இவர் தமிழில் அர்ஜூன் நடித்த மதராஸி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து தென்னிந்தியாவில் முக்கிய கவனிக்கத்தக்க நடிகையாக வலம் வருபவர்.

குறிப்பாக சரண் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த 'முனி' படத்தில் லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார், பின் சிம்புவுக்கு ஜோடியாக காளை படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவரது நடனம் குட்டிப்பிசாசு பாட்டில் பரவலாக பாராட்டப்பட்டது.

actress vedhika hot bikini pictures from Maldives beach

அதன் பின் ஏ. ஆர் ரஹ்மான் இசையில் கலா பிரபு இயக்கத்தில் சக்கரக்கட்டி படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்தார். பின் பரதேசி படத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பரதேசி படத்தில் வேதிகாவின் நடிப்பிற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் கிடைத்தன.

பின் வசந்த பாலன் இயக்கத்தில்  காவியத்தலைவன் படத்தில் சித்தார்த், பிருதிவிராஜ் உடன் நடித்தார். இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் மேல் ஃபாலோவர்களை வைத்துள்ள வேதிகா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படும் நடிகைகளில் முக்கியமானவர். சமீபத்தில் அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடி வைரலானார். 

actress vedhika hot bikini pictures from Maldives beach

இந்நிலையில் மாலத்தீவில் சுற்றுலா சென்றுள்ள நடிகை வேதிகா, அங்கு கடற்கரையில் எடுத்த தனது பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி உள்ளார். இதற்கு முன் சமீபத்திய மாலத்தீவில் ஆண்ட்ரியா, பூஜா ஹெக்டே, மாளவிகா மோகனன் பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். 

actress vedhika hot bikini pictures from Maldives beach

தொடர்புடைய இணைப்புகள்

actress vedhika hot bikini pictures from Maldives beach

People looking for online information on Andrea Jermiah, Beach, Bikini, Hot, Malavika Mohanan, Maldives, Vedhika will find this news story useful.