www.garudabazaar.com

நீங்க பார்க்காத குந்தவை.. நடிகை த்ரிஷா பகிர்ந்த சூப்பர் வீடியோ.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Actress Trisha shares video of Kundavai character getups

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Vetrimaaran : "இதுக்காக தான் இளையராஜா Sir சீக்ரமா பேசிட்டு போனார்.!" — விடுதலை இசைவிழாவில் வெற்றிமாறன்.!

த்ரிஷா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. அவரது நடிப்பில் ஏராளமான படங்கள் ரசிகர்கள் பலரின் ஃபேவரைட் லிஸ்ட்டிலும் உள்ளது. சாமி, கில்லி, கிரீடம், அபியும் நானும், விண்ணைத் தாண்டி வருவாயா, மங்காத்தா, 96, பேட்ட உள்ளிட்ட பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் த்ரிஷா நடித்துள்ளார். அதே போல, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் வெளியாகி இருந்தது.

Actress Trisha shares video of Kundavai character getups

Images are subject to © copyright to their respective owners.

பொன்னியின் செல்வன்

கல்கி எழுதிய புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. குந்தவை என்னும் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருந்த நிலையில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.

Actress Trisha shares video of Kundavai character getups

Images are subject to © copyright to their respective owners.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சூழ்நிலையில் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, படத்தின் பாடல்கள் எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்

குந்தவை

இந்த சூழ்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருந்த த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், குந்தவை கதாப்பாத்திர வடிவமைப்பு குறித்த காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

Actress Trisha shares video of Kundavai character getups

Images are subject to © copyright to their respective owners.

குந்தவை கதாப்பாத்திரத்திற்கான உடைகள், அணிகலன்கள் உருவாக்கம் மற்றும் வெவ்வேறு கெட்டப்களிலும் த்ரிஷா தோன்றும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன. மேலும், படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாக இருப்பதாகவும், ஹெட்போன்களை தயாராக வைத்துக்கொள்ளும்படியும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | 'சேது' படத்தை இந்தியில் இயக்கிய சதீஷ் கௌஷிக் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress Trisha shares video of Kundavai character getups

People looking for online information on Kundavai character getups, Ponniyin Selvan, Trisha Krishnan will find this news story useful.