தினமும் இரவு 8 மணிக்கு குழந்தையை எண்ணெய் தேய்ச்சு குளிக்க வைக்கிறேன்...ஏன் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை சுஜா வருணி. தமிழில் பிக்பாஸ் சீசன் 1 மூலம் மீண்டும் பிரபலம் அடைந்தார். அதன்பிறகு தனது நீண்டநாள் காதலரான நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவ் என்பவரை கரம் பிடித்தார் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த அவருக்கு தற்போது ஒரு குழந்தை இருக்கிறது குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வரும் அவர் தற்போது ஒரு பதிவை இட்டுள்ளார்.

அதில் "பலரும் என்னிடம் கேட்கிறார்கள். குழந்தைக்கு மாலை வேளையில் குளிக்க வைப்பது சரியா என்று நான் எனது மருத்துவரின் அறிவுரையின் படி எனது குழந்தையை தினமும் எட்டு மணிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவேன். இதனால் குழந்தையின் உடல் வலி நீங்கி நிம்மதியாக தூங்குகிறது. ஒரு அம்மாவாக குழந்தைக்கு எது நல்லது என்று நமக்கு தெரியும். உங்கள் மருத்துவருடன் கலந்து ஆலோசித்து பிறகு நீங்களும் இப்படி செய்யலாம். மேலும் காய்ச்சல் குளிர்காலங்களில் இப்படி வேண்டாம். வெயில் காலம் துவங்கி விட்டதால் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி இவ்வாறு செய்யலாம்" என்று கூறியுள்ளார்.