ஸ்ரேயா is Back.. தெய்வமே நீங்க இங்கயும் வந்துட்டீங்களா மொமன்ட்.! செம மாஸ் அறிவிப்பு.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை ஸ்ரேயா டிக்டாக் செயலில் இணையப்போவது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கியவர் ஸ்ரேயா. ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இவர் ஜோடி சேர்ந்து கலக்கி வந்தார். குறிப்பாக ரஜினி ஜோடியாக இவர் நடித்த சிவாஜி படத்தின் மூலம் தமிழகமெங்கும் பிரபலமடைந்தார். இவர் தற்போது விமல் ஜோடியாக சண்டக்காரி என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் புதிதாக டிக்டாக் செயலியில் இணைவது பற்றி அறிவித்துள்ளார். இதையடுத்து இனி டிக்டாக்கில் அவரது வீடியோக்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையவுள்ளது. இதனிடையே நடிகை சிம்ரன் அண்மையில் டிக்டாக்கில் இணைந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags : Shriya Saran, Tiktok, Sandakkari