www.garudabazaar.com

"அப்பா தல FAN.. தளபதி படத்துல நடிக்க எனக்கு சான்ஸ் கிடைச்சப்போ".. வாரிசு பட நடிகை சஞ்சனா EXCLUSIVE..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கும் சஞ்சனா திவாரி படம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

Actress Sanjana Tiwari on her parents reaction over chance

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார். வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில்  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. வாரிசு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சஞ்சனா திவாரி நமது Behindwoods சேனலுக்கு நேர்காணல் அளித்திருக்கிறார். அதில், பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்தும் அவர் மனம் திறந்திருக்கிறார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பிரபலமானா சஞ்சனாவின் முதல் படம் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி பேசியுள்ள அவர்,"நான் ஆரம்பத்தில் இருந்தே விஜய் சாரின் மிகப்பெரிய ரசிகை. அதேபோல அம்மாவுக்கும் அவரை பிடிக்கும். ஆனால், அப்பா மிகப்பெரிய தல Fan. எப்போதுமே எங்களுக்குள் யார் படத்துக்கு போவது என விவாதம் நடக்கும். இந்த சூழ்நிலையில் தான் எனக்கு வாரிசு படத்துல நடிக்க சான்ஸ் கிடைச்சது. அப்பா கிட்ட சொன்னேன். அவர் ரொம்ப சந்தோஷப்பட்டாரு. ஏன்னா, இப்படியான வாய்ப்பு அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கிடைக்காதுன்னு அவருக்கு நல்லாவே தெரியும். விஜய் சாரோட நடிச்சதே பெரிய சந்தோஷம் எனக்கு" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Actress Sanjana Tiwari on her parents reaction over chance

People looking for online information on Sanjana, Varisu, Vijay will find this news story useful.