www.garudabazaar.com

''அந்த ஹீரோ என் கூட திரும்ப நடிக்க விரும்பலனு சொன்னார்'' - சமீரா ரெட்டி சொல்லும் பகீர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Casting Couch எனப்படும் நடிகைகளை பட வாய்ப்புக்காக தவறாக அணுகும் விவகாரம் கடந்த சில வருடங்களாக திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகைகள் சிலர் அதிரடியாக தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Actress Sameera Reddy shares shocking information with co actors | நடிகை சமீரா ரெட்டி பகிர்ந்து கொண்ட அதிர்ச்சி தகவல்

அந்த வகையில் நடிகை சமீரா ரெட்டி தனக்கு நேர்ந்த அனுபவங்கள் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது திடீரென அந்த படத்தில் கிஸ்ஸிங் சீன் வைக்கப்பட்டதாகவும் முன்பே தெரிவிக்காததால் தான் நடிக்க மறுப்பு தெரிவித்ததாகவும் அவர் கூறினார். மேலும் தயாரிப்பாளர் தன்னை மாற்றிவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

மற்றொரு பாலிவுட் படத்தில் நடிக்கும் போது ஒரு ஹீரோ, அவர் மிகவும் போராடிப்பதாகவும், ஜாலியாக இல்லை என்றும் கூறி மீண்டும் உன்னுடன் நடிக்க விரும்பவில்லை எனவும் அந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு தான் அந்த ஹீரோவுடன் நடிக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தான் மற்ற நடிகர்களுடன் பார்ட்டி செல்வதில்லை, சகஜமாக பழகுவதில்லை என்றார். அது பட வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் தான் அதனை விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

Actress Sameera Reddy shares shocking information with co actors | நடிகை சமீரா ரெட்டி பகிர்ந்து கொண்ட அதிர்ச்சி தகவல்

People looking for online information on Casting couch, Sameera Reddy will find this news story useful.