''இந்த ரெண்டு படங்கள் தான் 'கைதி'க்கு இன்ஸ்பிரேஷன்'' - 'தளபதி 64' இயக்குநர் விளக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 24, 2019 03:21 PM
'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் கைதி. இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது இந்த படம் குறித்து பேசிய அவர் நடிகர் கமல்ஹாசனின் 'விருமாண்டி', மற்றும் 'டை ஹார்டு' படங்கள் தான் இந்த படத்துக்கு இன்ஸ்பிரேஷன் என்று தெரிவித்தார்.
''இந்த ரெண்டு படங்கள் தான் 'கைதி'க்கு இன்ஸ்பிரேஷன்'' - 'தளபதி 64' இயக்குநர் விளக்கம் வீடியோ
Tags : Kaithi, Lokesh Kanagaraj, Karthi, Sam CS