www.garudabazaar.com

நாங்களும் வந்துட்டோம்.. Chef தாமுவின் 'அரபிக் குத்து'.. ஃபயர் விட்ட 'CWC' பிரபலங்கள்.. வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடைசியாக டாக்டர் படத்தை இயக்கியிருந்த நெல்சன் திலீப்குமர், தற்போது நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Chef damu arabic kuthu version gone viral on social media

இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், ஏப்ரல் மாதம் திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படத்தின் வெளியீடு, தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாகலாம் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீஸ்ட் படக்குழு

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்ட பலரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆட்டம் போட வைத்த 'அரபிக்குத்து'

பீஸ்ட் படத்தின் முதல் பாடலான 'அரபிக்குத்து' கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, காதலர் தினத்தன்று வெளியாகியிருந்தது. கடும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருந்த இந்த பாடல், ரசிகர்களை குஷிப்படுத்தவும் தவறவில்லை. சிவகார்த்திகேயன் வரிகளில், அனிருத் இசையமைத்திருந்த இந்த பாட்டு, ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரையும் கட்டிப் போட்டு நடனமாட வைத்தது.

பிரபலங்களின் 'வைரல்' டான்ஸ்

அனிருத், நடிகைகள் சமந்தா, பூஜா ஹெக்டே, கீர்த்தி சுரேஷ், இயக்குனர் அட்லீ, நடிகை கனிகா, ராஷ்மிகா, வருண் தவான் என பல பிரபலங்கள், அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்தனர். இந்நிலையில், தற்போது பிரபல சமையல் கலை நிபுணர் தாமுவும் தனது பங்குக்கு அரபிக்குத்து பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ ஆடி அதனை வெளியிட்டுள்ளார்.

Chef தாமு வெர்ஷன்

செஃப் தாமு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம், தமிழக மக்கள் மத்தியில் இன்னும் அதிகம் பிரபலம் அடைந்தார். தற்போது 'சீசன் 3' யிலும் தாமுவின் ஜாலியான செயல்பாடு, அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.

இந்நிலையில், டிரெண்டில் இருக்கும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடியுள்ள தாமு, தன்னுடைய ஸ்டைலில் மூவ்மென்ட்களை போட்டுள்ளார். குக் வித் கோமாளி ரசிகர்கள் மத்தியில், இந்த வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல், குக் வித் கோமாளி பிரபலங்கள் பலரும், இந்த வீடியோவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chef Damu (@chef_damu)

 

மற்ற பிரபலங்களின் 'அரபிக்குத்து' வெர்ஷன் போல, தற்போது செஃப் தாமுவின் வெர்ஷனும் இணையத்தை ஒரு ரவுண்டு அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Chef damu arabic kuthu version gone viral on social media

People looking for online information on Arabic Kuthu, Beast, Beast Movie, Chef Damu, Cook with comali, CWC Season 3, Damu will find this news story useful.