பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் தமிழில் தியாகராஜா குமாரராஜா இயக்கிய 'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சயம். அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் 'கோச்சடையான்' படத்தில் வில்லனாக நடித்தவர், 'முப்பரிமானம்' 'மாயவன்' என அவ்வப்போது கவனம் ஈர்த்தார்.

தொடர்ந்து தளபதி விஜய்க்கு வில்லனாக 'பிகில்' படத்தில் மிரட்டினார். ஹிந்தி, தமிழ் மட்டுமல்லாமல் பெரும்பாலான இந்திய மொழிகளில் அவர் நடித்துள்ளார். மேலும் கிரிமினல் ஜஸ்டிஸ் என்ற வெப் சீரிஸிலும் அவர் நடித்துள்ளார்.
நடிகர் ஜாக்கி ஷெராஃபிற்கு டைகர் ஷெராஃப் என்ற மகனும், கிருஷ்ணா ஷெராஃப் என்ற மகளும் உள்ளனர். இதில் டைகர் ஷெராஃப் ஹிந்தியில் முன்னணி ஹீரோவாக விளங்குகிறார். மேலும் ஜாக்கி ஷெராஃபின் மகள் கிருஷ்ணா ஷெராஃப் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது பிகினி உடையில் காதலருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.